வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |
உடல் நலக்குறைவால் காலமான மூத்த பத்திரிகையாளர் சோவின் உடல், சென்னை, பெசன்ட் நகர் மின்மயானத்தில், தகனம் செய்யப்பட்டது.



நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் உள்ளிட்ட பன்முக திறமை கொண்டவர் சோ எனும் சோ ராமசாமி. சென்னை அப்பலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர் சோ இன்று அதிகாலையில் காலமானார். அவரது உடல், எம்.ஆர்.சி., நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, அஜித்குமார் என சினிமா நட்சத்திரங்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி, பிரதமர் மோடி, நடிகர் கமல் உள்ளிட்டவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இதன் பின்னர், அவரது வீட்டில் இருந்து சோ உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இறுதிச்சடங்கை அவரது மகன் ஸ்ரீதர் செய்தார். இதன் பின்னர் சோ உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்களில், சோ உறவினர்கள்,, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ, வாசன், இல.கணேசன், நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி பொன் வண்ணன், பொது மக்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.