ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு திரையுலகத்தினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணுவும் ஜெயலலிதாவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்... ‛‛மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்கள் அன்பில் ஒரு தாயாகவும், அழகில் ஒரு தேவதையாகவும், அறிவில் மகா மந்திரியாகவும், ஆதரவில் கருணை உறவாகவும், கண்டிப்பில் நேர்மை ஆசிரியராகவும், அன்பு, பாசம், நேசம், தியாகம் அக்கறை, அரவணைப்பு என எல்லா உணர்வுகளையும் கொண்டு வாழ்ந்த தெய்வம் அம்மா! அவர்களின் இழப்பு தமிழகத்துக்கும் அகிலத்துக்கும் பேரிழப்பாகும். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்!''
இவ்வாறு தாணு கூறியுள்ளார்.