அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நடிகர் அஜித் குமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பல்கேரியாவில் தனது 57-வது படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் அஜித், அங்கிருந்தபடியே ஜெயலலிதாவிற்கு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
‛‛மாண்புமிகு புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் சக தமிழ் நாட்டு மக்களுக்கும், அதிமுக., கழகத் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்து உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வர வேண்டும் என நாம் பிரார்த்தித்துக் கொண்டிருந்த வேளையில் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற என் சக தமிழ் மக்களுக்கும் இந்தப் பிரிவைத் தாங்கும் வல்லமையை தர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஆழ்ந்த வருத்தத்துடன்
அஜித் குமார்
இவ்வாறு அஜித் கூறியுள்ளார்.