Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெள்ளித்திரையில் ஒரு விடிவெள்ளி - அமரர் ஆனார் ஜெயலலிதா

06 டிச, 2016 - 02:00 IST
எழுத்தின் அளவு:
TN-CM-Jayalalitha-passes-away

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலன்றி டிச., 5-ம் தேதி காலமானார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட கடந்த செப்., 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டரை மாத காலமாதமாக சிகிச்சை பெற்று வந்த முதல்வருக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென நேற்று(டிச., 4-ம் தேதி) கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட மீண்டும் அவர் தீவிர சிகிச்சை பிரிவிக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, தொடர்ந்து அவரது உடல்நிலை மிகமிக மோசமானது. அப்பல்லோ, டில்லி ஏய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆயினும் அவர் சிகிச்சை பலன் இன்றி டிச., 5-ம் தேதி காலமானார். முதல்வரின் மறைவு செய்தி தமிழக மக்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


கர்நாடக மாநிலம் மைசூர் மாநிலம், மெலுகொட்டி என்ற ஊரில் 1948-ம் ஆண்டு பிப்., 24-ம் தேதி, ஜெயராம் - சந்தியா தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவள்ளி அலைஸ் ஜெயலலிதா. ஜெயலலிதா 2 வயது இருக்கும்போதே அவரது அப்பா மரணமடைய தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார். பெங்களூரில் பிஷப் காட்டன் என்ற பள்ளியிலும், சென்னையில் சர்ச் பார்க் என்ற பள்ளியிலும் படித்துள்ளார்.


நாட்டியத்தில் கெட்டிகாரர் : சிறுவயதிலேயே எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமை பெற்றவர். மேலும் படிப்பில் கெட்டிக்கார பெண்ணாக திகழ்ந்த ஜெயலலிதாவுக்கு, நாட்டியத்திலும் விருப்பம். ரேடியோவில் ஏதாவது ஒரு பாடல் கேட்டாலும் அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆட தொடங்கி விடுவார். பல்வேறு பரதநாட்டிய அரங்கேற்றங்களை அவர் சிறுவயதிலேயே நிகழ்த்தினார்.


நாட்டியத்திற்காக சிவாஜி கையால் விருது : 1960-ல் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி அரங்கில், 12 வயது ஜெயலலிதா ஆடிய பரதநாட்டியத்தைப் பார்த்து வானளாவப் புகழ்ந்தார் சிவாஜி கணேசன். அப்போதே ஜெயலலிதாவை பாராட்டி, வருங்காலத்தில் நீ சினிமாவில் பெரிய ஆளாய் வருவாய் என்று பாராட்டினார்.


நாடகத்திலும் அசத்திய ஜெயலலிதா : ஒய்.ஜி.பார்த்தசாரதி குழுவினர் நடத்திய நாடகத்தில் ஆங்கிலம் சரளமாக பேசும் ஜெயலலிதாவுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடத்தில் நடித்தார். இந்த நாடகத்தில் வில்லனாக நடித்தவர் சோ. தனது சிறந்த நடிப்பால் அனைவரது பாராட்டையும் பெற்றார். இதன்மூலம் தான் அவரது சினிமா வாய்ப்பு வர தொடங்கியது.


15 வயதில் சினிமா : கடந்த, 1961ம் ஆண்டு எடிசில் என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். அப்படம் அவருக்கு எந்த பாராட்டும் பெற்றுத் தரவில்லை. 1964ல் வெளியான, சின்னடா கொம்பே என்ற கன்னட படம் இவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றுத் தந்தது.


முதல் தமிழ்படம் : கடந்த, 1965ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற திரைப் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்தார். 1968ல், தர்மேந்திரா நடித்த, இஷாத் என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது.


தமிழ் திரையுலகில், ஸ்கர்ட் அணிந்து நடித்த முதல் நடிகை என்ற பெயர் இவருக்கு உண்டு. கடந்த, 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்து வெளியான, பட்டிக்காடா பட்டணமா என்ற திரைப்படம் தேசிய விருதை தட்டிச் சென்றது. இதன் பின் சூரியகாந்தி, சந்திரோதயம் ஆகிய படங்கள் இவரது நடிப்புக்கு பெருமை சேர்த்தது. இதற்காக பிலிம்பேர் விருது கிடைத்தது. மேலும் சிவாஜியுடன் நடித்த கலாட்டா கல்யாணம், தெய்வ மகன் போன்ற படங்கள், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் என்ற விருதை பெற்ற முதல் தமிழ் திரைப்படம் என்ற பெயரை பெற்றது.


எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக்காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் வசூலையும் வாரி குவித்தது. இவர்களது ஜோடியில் ஆயிரத்தில் ஒருவன், காவல்காரன், அடிமைப்பெண், எங்கள் தங்கம், குடியிருந்த கோயில், ரகசிய போலீஸ் 115, நம்நாடு உள்ளிட்ட பல, ஹிட் படங்கள் வெளியாகின. திரையுலகின் பிற்பகுதியில் அவர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.


கடைசிப்படம் : 1980ல் வெளியான, நதியை தேடி வந்த கடல் படம் தான் இவர் நடித்த கடைசி திரைப்படம். இதில் சரத்பாபு ஹீரோவாக நடித்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழக முதல்வரான பிறகு, 1992ல், நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற படத்தில் முதல்வராக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். விசு இயக்கத்தில் நிழல்கள் ரவி, மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீதிவ்யா, விசு, சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இப்படம், தேசிய விருதை வென்றது.


முன்னணி நடிகர்கள் : எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், சரத்பாபு, சிவகுமார், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜெயலலிதா ஜோடியாக நடித்துள்ளார்.


வெற்றி ஜோடி : ஆயிரத்தில் ஒருவன் தான், எம்.ஜி.ஆர்-., - ஜெயலிதா நடிப்பில் வெளியான முதல் படம். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன், 28 படங்கள் நடித்தார். அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகள் என்று புகழ்பெற்ற இந்த ஜோடி, ஆயிரத்தில் ஒருவன், தேர் திருவிழா, காவல்காரன், குடியிருந்த கோயில், நம் நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, சந்திரோதயம்,, அடிமைப்பெண், ராமன் தேடிய சீதை, காதல் வாகனம், ரகசிய போலீஸ் 115, மாட்டுக்கார வேலன், குமரி கோட்டம், கன்னி தாய், என் அண்ணன், எங்கள் தங்கம், ஒரு தாய் மக்கள், ஒளி விளக்கு, கணவன், நீரும் நெருப்பும், பட்டிக்காட்டு பொன்னையா, கண்ணன் என் காதலன், அன்னமிட்ட கை, புதிய பூமி, அரச கட்டளை உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.


100வது படம் : கடந்த, 1974ல் வெளியான திருமாங்கல்யம், இவரது, 100வது படமாக அமைந்தது.


100 நாட்களை கடந்து ஓடிய 77 படங்கள் : சினிமாவில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் பயணித்திருக்கும் ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என 142 படங்களில் நடித்துள்ளார். இதில் 77 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்துள்ளன. அத்துடன் 18-க்கும் மேற்பட்ட படங்கள் 25 வாரங்களை கடந்து ஓடியுள்ளது.


பிறமொழி படங்கள் : 1961ல் எடிசில் (ஆங்கிலம்), 1968ல் இஷாத்(ஹிந்தி) படங்களிலும், ஸ்ரீ சைல மகாத்மே, மனே அலியா, சின்னடே கொம்பே, மவன மகலு, நன்ன கார்டவா, படுகுவ தாரி போன்ற கன்னட படங்களிலும், மனசுலு மமதுலு, அஸ்டி பார்லு, அமே எவரு, நவராத்ரி, குடசரி 116, சிக்கடு, துரகடு, கோபாலுடு பூபாலுடு, பிரம்மசாரி, சுக துகலு, நிலவு டூபிடி, பாக்தாத் கஜடோங்கா, திக்க சங்கரராய்யா, அடசர குடும்பம், அட்ருசந்தவலு, கதனயாகுடு, கந்திகோட்ட ரகசியம், அக்க செல்லுலு, அலிபாபா 40 தொங்கலு, ஸ்ரீ கிருஷ்ண விஜயம், தர்ம டாட்டா, பார்ய பிடலு, ஸ்ரீ கிருஷ்ண சத்ய, அக்க தமுடு, தேவடு சிசின்ன மனசுல்ல, டாக்டர் பாபு, பிரமலு பெல்லிலு, நயகுடு வினயகுடு போன்ற தெலுங்கு படங்களிலும், ஜேசுஸ் என்ற மலையாள படத்திலும் நடித்திருக்கிறார்.


தாய்க்கு மரியாதை : ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் இயற்பெயர் வேதவள்ளி. அவரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு கட்டிய ஜெயலலிதா, அதற்கு வேதா நிலையம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.


அம்மா என்றால் அன்பு : நடிப்பில் மட்டுமல்லாமல் பாடுவதிலும் வல்லவராக இருந்தார். திரைப்படங்களில், 9 பாடல்களைப் பாடியுள்ளார். கண்ணன் என் காதலன் படப்பிடிப்பின் போது மீரா பஜன் பற்றி இவர் பாடியதை கேட்ட எம்ஜிஆர்., நீ நன்றாக பாடுகிறாய் என்று சொல்லி தனது அடுத்தப்படமான அடிமைப் பெண் என்ற படத்தில் அவர் முடியாது என்று சொல்லியும் வற்புறுத்தி பாட வைத்தார். அது தான் அடிமைப் பெண் படத்தில் அவர் பாடிய அம்மா என்றால் அன்பு... பாட்டு. இந்தப்பாட்டு ஹிட்டானது. தொடர்ந்து, ஓ மேரி தில்ரூபா... (சூரியகாந்தி), நான் என்றால் அது... (சூரியகாந்தி), கண்களில் ஆயிரம்... (வந்தாலே மகராசி), இரு மாங்கனி போல்... (வைரம்), சித்திர மண்டபத்தில்... (அன்பை தேடி), திருமாங்கல்யம் கொள்ளும் முறை... (திருமாங்கல்யம்), உலகம் ஒருநாள் பிறந்தது... (திருமாங்கல்யம்), மெட்ராஸ் மெயில்... (உன்னை சுற்றும் உலகம்). இதில், ஓ மேரி தில்ரூபா.... கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்ஸ், சித்திர மண்டபத்தில்... போன்ற பாடல்களை டிஎம் சவுந்தரராஜன் உடனும், நான் என்றால் அது நானும் அவளும்...., இரு மாங்கனி போல் இதழ் ஓரம்... பாடல்களை எஸ்பி பாலசுப்ரமணியம் உடன் இணைந்து பாடியிருக்கிறார்.


எம்.ஜி.ஆர்., வழியில்... : ஏழ்மை நிலையில் இருந்த எம்.ஜி.ஆர்., நாடகம் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சினிமாவுக்குள் நுழைந்தார். சினிமாவில் முத்திரை பதித்த அவர், அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டி, தமிழக முதல்வரானார். மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றார். மறையும் வரை முதல்வராகவே இருந்தார். அதே போல ஜெயலலிதாவும் நாடகம், சினிமா, அரசியலில் வெற்றிக் கொடி நாட்டி, தமிழக முதல்வரானார். எம்.ஜி.ஆரைப் போலவே முதல்வராகவே மறைந்தார்.


முக்கிய தமிழ் படங்கள்


1965 - வெண்ணிற ஆடை, ஆயிரத்தில் ஒருவன், கன்னித்தாய்


1966 - முகராசி, தனிப்பிறவி, சந்திரோதயம், கவுரி கல்யாணம், மேஜர் சந்ரகாந்த், மணி மகுடம், குமரி பெண், யார் நீ, நீ, மோட்டார் சுந்தரம் பிள்ளை


1967 - தாய்க்கு தலைமகன், அபூர்வ பிறவிகள், நான், மாடி வீட்டு மாப்பிள்ளை, அரச கட்டளை, காவல்காரன், கந்தன் கருணை, ராஜா வீட்டு பிள்ளை


1968 - பணக்கார பிள்ளை, எங்க ஊரு ராஜா, புதிய பூமி, தேர் திருவிழா, குடியிருந்த கோயில், மூன்று எழுத்து, முத்து சிப்பி, காதல் வாகனம், கணவன், கலட்டா கல்யாணம், பொம்மலாட்டம், கண்ணன் என் காதலன், ஒளி விளக்கு, ரகசிய போலீஸ் 115, அன்று கண்ட முகம்


1969 - நம்நாடு, தெய்வமகன், குருதட்சிணை, மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண்


1970 - அனாதை ஆனந்தன், தேடி வந்த மாப்பிள்ளை, எங்க மாமா, எங்கள் தங்கம், எங்கிருந்தோ வந்தாள், என் அண்ணன், பாதுகாப்பு


1971 - சுமதி என் சுந்தரி, ஆதி பராசக்தி, அன்னை வேளாங்கண்ணி, சவாலே சமாளி, தங்க கோபுரம், குமரி கோட்டம், ஒருதாய் மக்கள், நீரும் நெருப்பும்


1972 - அன்னமிட்ட கை, பட்டிக்காடா பட்டணமா, ராஜா, ராமன் தேடிய சீதை, நீதி, திக்கு தெரியாத காட்டில், சக்தி லீலை


1973 - பாக்தாத் பேரழகி, பட்டிக்காட்டு பொன்னையா, வந்தாளே மகராசி, கங்கா கவுரி, சூரிய காந்தி


1974 - அன்பை தேடி, அன்பு தங்கை, தாய், இரு தெய்வங்கள், வைரம், திருமாங்கல்யம்


1975 - அவளுக்கு ஆயிரம் கண்கள், யாருக்கும் வெட்கம் இல்லை, அவன்தான் மனிதன், பாட்டும் பாரதமும்


1976 - கணவன் மனைவி, சித்ரா பவுர்ணமி,


1977 - ஸ்ரீ கிருஷ்ண லீலை, உன்னை சுற்றும் உலகம்


1980 - மாற்றான் தோட்டத்து மல்லிகை, மணிப்பூர் மாமியார், நதியைத் தேடி வந்த கடல்


1992 - நீங்க நல்லா இருக்கணும்


பிளாக் அண்ட் ஒயிட் படங்கள்... : ஜெயலலிதா சுமார் 18 ஆண்டுகள் சினிமாவில் இருந்துள்ளார். பிளாக் அண்ட் ஒயிட் காலம் தொட்டே அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த படங்கள் இதோ... அன்னமிட்ட கை(எம்ஜிஆர்), அன்று கண்ட முகம்(ரவிச்சந்திரன்), அரசகட்டளை(எம்ஜிஆர்), சந்திரதோயம்(எம்ஜிஆர்), தெய்வமகன்(சிவாஜி), எங்க ஊர் ராஜா(சிவாஜி), கலாட்டா கல்யாணம்(சிவாஜி), கெளரி கல்யாணம்(ஜெய்சங்கர்), குருதட்சணை(சிவாஜி), காவல்காரன்(எம்ஜிஆர்), காதல் வாகனம்(எம்ஜிஆர்), கணவன்(எம்ஜிஆர்), கண்ணன் என் காதலன்(எம்ஜிஆர்), கன்னித்தாய்(எம்ஜிஆர்), குமரிப்பெண்(ரவிச்சந்திரன்) மேஜர் சந்திரகாந்த்(ஏவிஎம் ராஜன்), மோட்டார் சுந்தரம் பிள்ளை(சிவாஜி), முகராசி(எம்ஜிஆர்), முத்துச்சிப்பி(ஜெய்சங்கர்), நீ(ஜெய்சங்கர்), ஒரு தாய் மக்கள்(எம்ஜிஆர்), பணக்கார பிள்ளை(ரவிச்சந்திரன்), பட்டிக்காடா பட்டணமா(சிவாஜி), பொம்மலாட்டம்(ஜெய்சங்கர்), புதியபூமி(எம்ஜிஆர்.,), சூரியகாந்தி(முத்துராமன்), தாய்(சிவாஜி), தனிப்பிறவி(எம்ஜிஆர்), தேர்த்திருவிழா(எம்ஜிஆர்), உன்னை சுற்றும் உலகம்(கெஸ்ட் ரோல்), வைரம்(ஜெய்சங்கர்), வந்தாளே மகராசி(ஜெய்சங்கர்), யார் நீ(ஜெய்சங்கர்), யாருக்கும் வெட்கமில்லை(ஸ்ரீகாந்த்) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


வண்ண படங்கள்... : ஆயிரத்தில் ஒருவன்(எம்ஜிஆர்.,), அடிமைப்பெண்(எம்ஜிஆர்), அன்பை தேடி(சிவாஜி), அன்னை வேளாங்கன்னி(ஜெமினி), ஆதி பராசக்தி(ஜெமினி), அவன் தான் மனிதன்(சிவாஜி), சித்ரா பவுர்மணி(சிவாஜி), தர்மம் எங்கே(சிவாஜி), என் அண்ணன்(எம்ஜிஆர்), எங்க மாமா(சிவாஜி), எங்கள் தங்கம்(எம்ஜிஆர்), எங்கிருந்தோ வந்தாள்(சிவாஜி), கங்கா கெளரி(ஜெமினி) கந்தன் கருணை(சிவக்குமார்), குடியிருந்த கோயில்(எம்ஜிஆர்.,), குமரிக்கோட்டம்(எம்ஜிஆர்.,) மாட்டுக்கார வேலன்(எம்ஜிஆர்.,), மூன்றெழுத்து(ரவிச்சந்திரன்), நான்(ரவிச்சந்திரன்), நம் நாடு(எம்ஜிஆர்.,), நதியை தேடி வந்த கடல்(சரத்பாபு), நீரும் நெருப்பும்(எம்ஜிஆர்.,), வீதி(சிவாஜி), ஒளி விளக்கு(எம்ஜிஆர்.,), பட்டிக்காட்டு பொன்னையா(எம்ஜிஆர்.,), பாட்டும் பரதமும்(சிவாஜி), ரகசிய போலீஸ் 115(எம்ஜிஆர்.,), ராஜா(சிவாஜி), ராமன் தேடிய சீதை(எம்ஜிஆர்.,), சவாலே சமாளி(சிவாஜி), சுமதி என் சுந்தரி(சிவாஜி), தேடி வந்த மாப்பிள்ளை(எம்ஜிஆர்.,), திக்கு தெரியாத காட்டில்(முத்துராமன்), திருமாங்கல்யம்(முத்துராமன்), வெண்ணிற ஆடை உள்ளிட்ட பல கலர் படங்களிலும் ஜெயலலிதா நடித்திருக்கிறார்.


சிறந்த 5 படங்கள் : ஜெயலலிதா நுாற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் சிறந்த ஐந்து படங்கள்;


வெண்ணிற ஆடை : ஜெயலலிதா, முதல் தமிழ்ப் படத்திலேயே, அத்தனை நவரசங்களையும் கொட்டி நடித்து, இனிமையான பாடல்களுக்கு அற்புதமான நடன அசைவுகளை வழங்கி முதல் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்தியிருந்தார்.


அடிமைப் பெண் : அதிகப் படங்களில் நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆருடன் அடிமைப் பெண் இருவருக்கும் மறக்கமுடியாத வெற்றிப் படம். இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஜெயலலிதா, ராணியாகக் காட்டிய வில்லித் தனமும், கண்களில் காட்டிய குரூரமும், உதட்டுச் சுழிப்பில் வெறுப்பைக் காட்டிய விதமும் ரசிகர்களுக்கு அவரது இன்னொரு பரிமாணத்தைக் காட்டின. ஏமாற்றாதே, ஏமாறாதே பாடலில் ரோமானிய பாணி நடனமும், ஆயிரம் நிலவே பாடலில் காட்டிய காதல் ரசமும், இன்றைக்கும் ரசிகர்கள் சிலாகித்துப் பேசும் அம்சங்கள்.


எல்லாவற்றுக்கும் மேலாக, அம்மா என்றால் அன்பு என தன் இனிய குரலால் வசீகரித்து, தனது பாட்டுப் பாடும் திறனையும் காட்டினார் ஜெயலலிதா. அவரது முதல் பாடலில் அவர் உச்சரித்த முதல் வார்த்தையே கால ஓட்டத்தில் அவரது மறுபெயராக உருவெடுத்தது.


வந்தாளே மகராசி : கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சாதாரண கருப்பு வெள்ளைப் படம்தான். ஆனால் பயந்த சுபாவம் கொண்டவராகவும், துணிச்சலான பெண்ணாகவும் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கினார். ஜெய்சங்கர் கதாநாயகன் என்றாலும் படம் முழுக்க ஜெயலலிதாவின் இரட்டை வேட ஆக்கிரமிப்புதான்.


எங்கிருந்தோ வந்தாள் : இந்தித் திரைப்படத்தின் தழுவல் சிவாஜி கதாநாயகன் என்றாலும், பைத்தியக்கார சிவாஜியைக் கட்டம் கட்டமாகத் திருத்தி, ஒரு கட்டத்தில் தன்னையே தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் சிவாஜியையே மிஞ்சும் அளவுக்கு சில இடங்களில் ஜொலித்திருப்பார் ஜெயலலிதா. சாதாரண பின்புலத்தைக் கொண்ட வேலைக்காரி கதாபாத்திரத்தில் பைத்தியக்கார சிவாஜியை விட, ஜெயலலிதாதான் ரசிகர்களைக் கவர்ந்தார். இறுதியில், குணமாகி விட்ட சிவாஜி, இந்தப் பொண்ணு யாரு எனக் கேட்கும் இடத்தில் கூனிக் குறுகி நிற்பதிலும், பின்னர் தன்னை நிரூபிக்க, வெகுண்டெழுந்து போராடும் விதத்திலும், இறுதிக் காட்சிகளில் படம் முழுக்க ஜெயலலிதா தான் ஆக்கிரமித்திருந்தார்.


சவாலே சமாளி : நாகரிக, பணக்காரப் பெண்ணாக முதலில் அறிமுகம். அதில் காட்டிய உற்சாகம், திமிர், அகங்காரம். பின்னர், தனக்குத் தெரியாமலேயே தான் ஒரு பந்தயப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு, தான் அவமதித்த ஏழை விவசாயியையே திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழலில் நொறுங்கிப் போகும் அவரது தன்மானத்தைக் காட்டிய விதம். என்னைத் தொடாதீர்கள் என ஆக்ரோஷமாகக் கணவனுக்குக் கட்டளையிட்டு விலகியிருப்பது - ஏழை வீட்டில் சின்னச் சின்ன காரியங்களைச் செய்யக் கஷ்டப்படுவது - தனது நிலை குறித்து பெற்றோரிடம் குமுறுவது - பின் கணவரின் நல்ல குணம் அறிந்து மனம் மாறுவது - காதல் பாடல்களே இல்லாத படத்தில் இறுதியில் வரும் ஒரே காட்சியில் கணவனுடன் முதன் முறையாக இணைந்து, தேக்கி வைத்த அத்தனை காதலையும் கொட்டித் தீர்த்த விதம் - இப்படிப் பல பரிமாணங்களில் ஜெயலலிதா நடிப்பு முத்திரை குத்திய படம், சவாலே சமாளி.


விருதுகள் : 1972ம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இதுதவிர கவுரவ டாக்டர் பட்டம், ஆசிய கில்டு விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.


ஜெயலலிதாவின் பிரபலமான தனிப்பாடல்கள்...


01. பருவம் எனது பாடல்.... (ஆயிரத்தில் ஒருவன்)


02. உன்னை நான் சந்தித்தேன்.. (ஆயிரத்தில் ஒருவன்)


03. ஆடாமல் ஆடுகிறேன்... (ஆயிரத்தில் ஒருவன்)


04. அம்மா என்றால் அன்பு... (அடிமைப்பெண்)


05. பதினாறு வயதினிலே... (அன்னமிட்ட கை)


06. என்னை பாட வைத்தேன்... (அரசக்கட்டளை)


07. எங்கிருந்தோ ஒரு குரல்... (அவன் தான் மனிதன்)


08. கெட்டி மேளம் கொட்டுற... (சந்திரோதயம்)


09. கூட்டத்திலே யார் தான்... (தெய்வ மகன்)


10. அத்தைக்கு மீசை வச்சு... (எங்க ஊர் ராஜா)


11. கட்டழகு தங்க மகள்... (காவல்காரன்)


12. வருஷத்த பாரு... (குமரிப்பெண்)


13. யாரோ ஆட பிறந்தவர்... (குமரிப்பெண்)


14. ஒரு நாள் யாரோ... (மேஜர் சந்திரகாந்த்)


15. பச்சைக்கிளி.... (மூன்றெழுத்து)


16. வந்தாள் என்னோடு... (நான்)


17. நான் எழு வயசிலே... (நம் நாடு)


18. ஆடை முழுதும் நான்னய்யா... (நம் நாடு)


19. அடடா என்ன அழகு... (நீ)


20. எனக்கு வந்த இந்த மயக்கம்... (நீ)


21. வெள்ளிக்கிழமை விடியும்... (நீ)


22. கொண்டு வா இன்னும் கொஞ்சம்... (நீ)


23. ஓடுது பார் நல்ல படம்... (நீதி)


24. நான் கண்ட கனவினில்... (ஒளி விளக்கு)


25. ஆயிரம் கண்ணுக்கு... (ஒரு தாய் மக்கள்)


26. முத்து சோலை தங்க கிளிகள்... (பட்டிகாடா பட்டணம்மா)


27. மயக்கத்தை தந்தவன்... (பொம்மலாட்டம்)


28. நெத்தியிலே பொட்டு வச்சு... (புதிய பூமி)


29. சந்தனம் குங்குமம்... (ரகசிய போலீஸ் 115)


30. கங்கையிலே ஓடம் இல்லையோ... (ராஜா)


31. சிட்டுக்குருவிக்கென்ன... (சவாலே சமாளி)


32. ஒரு ஆலயம் ஆகும்... (சுமதி என் சுந்தரி)


33. ஓராயிரம் நாடகம்... (சுமதி என் சுந்தரி)


34. கல்யாண சந்தையிலே... (சுமதி என் சுந்தரி)


35. அன்னை என்று ஆகும் முன்னே... (தாய்க்கு தலைமகன்)


36. எதிர்பாராமல்... (தனிப்பிறவி)


37. என்ன என்ன வார்த்தைகளோ... (வெண்ணிற ஆடை)


38. கண்ணன் என்னும் மன்னன்... (வெண்ணிற ஆடை)


39. அம்மம்மா காற்று வந்தா... (வெண்ணிற ஆடை)


40. பொன்மேனி தழுவாமல்... (யார் நீ)


41. நானே வருவேன்... (யார் நீ)


42. என் வேதனையில்... (யார் நீ)


ஜெயலலிதாவின் பிரபலமான டூயட் பாடல்கள்...


01. நானமோ இன்னும் நானமோ... (ஆயிரத்தில் ஒருவன்)


02. ஆயிரம் நிலவே வா... (அடிமைப்பெண்)


03. காலத்தை வென்றவன் நீ... (அடிமைப்பெண்)


04. சித்திரை மண்டபத்தில்... (அன்பை தேடி)


05. வண்ணமென்னும் வீதியிலே... (அன்னை வேளாங்கன்னி)


06. அழகுக்கு மறுபெயர்... (அன்னமிட்ட கை)


07. ஒன்னன்னா ஒன்னன்னா சொல்லு... (அன்னமிட்ட கை)


08. சந்திரோதயம் ஒரு... (சந்திரோதயம்)


09. எங்கிருந்தோ ஆசைகள்... (சந்திரோதயம்)


10. காதலிக்க கற்று கொள்ளுங்கள்... (தெய்வ மகன்)


11. வந்தாலும் வந்தாண்டி... (சித்ரா பெளர்மணி)


12. பள்ளி அறைக்குள் வந்த... (தர்மம் எங்கே)


13. வீரம் எனும் பாவை... (தர்மம் எங்கே)


14. கொண்டை ஒரு பக்கம்... (என் அண்ணன்)


15. நீல நிறம்... (என் அண்ணன்)


16. என்னங்க சொல்லுங்க.... (எங்க மாமா)


17. பரமேஸ்வரி ராஜேஸ்வரி... (எங்க ஊர் ராஜா)


18. தங்க பதக்கத்தின் மேலே... (எங்கள் தங்கம்)


19. நான் அளவோடு ரசிப்பவன்... (எங்கள் தங்கம்)


20. டோன்ட் டச் மீ... (எங்கள் தங்கம்)


21. சிரிப்பில் உண்டான ராகத்திலே... (எங்கிருந்தோ வந்தான்)


22. நல்ல இடம் நீ வந்த இடம்... (கலாட்டா கல்யாணம்)


23. மெல்ல வரும் காற்று... (கலாட்டா கல்யாணம்)


24. மெல்ல போ மெல்ல போ... (காவல்காரன்)


25. நினைத்தேன் வந்தாய்... (காவல்காரன்)


26. மயங்கும் வயது.... (கணவன்)


27. சிரித்தால் தங்க பதுமை... (கண்ணன் என் காதலன்)


28. மின்மினியாய் கண்மணிகள்... (கண்ணன் என் காதலன்)


29. என்றும் பதினாறு... (கன்னி தாய்)


30. நீயே தான் எனக்கு... (குடியிருந்த கோயில்)


31. குங்குமப் பொட்டின் மங்கலம்... (குடியிருந்த கோயில்)


32. நாம் ஒருவரை ஒருவர்... (குமரி கோட்டம்)


33. தொட்டு கொள்ளவா... (மாட்டுக்கார வேலன்)


34. நேற்று நீ சின்ன பாப்பா... (மேஜர் சந்திரகாந்த்)


35. காதலன் வந்தான்... (மூன்றெழுத்து)


36. காத்திருந்த கண்களே... (மோட்டார் சுந்தரம் பிள்ளை)


37. எனக்கும் உனக்கும் தான்... (முகராசி)


38. போதுமா இந்த இடம்... (நான்)


39. அதே முகம்.... (நான்)


40. அம்மனோ சாமியோ... (நான்)


41. நினைத்ததை நடத்தியே... (நம் நாடு)


42. வாங்கய்யா வாத்தியாரய்யா... (நம் நாடு)


43. தவிக்குது தயங்குவது... (நதியை தேடி வந்த கடல்)


44. கன்னி ஒருத்தி மடியில் (நீரும் நெருப்பும்)


45. ருக்குமணியே.... (ஒளி விளக்கு)


46. நாங்க புதுசா... (ஒளி விளக்கு)


47. கண்ணன் எந்தன் காதலன் (ஒரு தாய் மக்கள்)


48. பட்டம் விட்டது போலே... (பணக்கார பிள்ளை)


49. ஒரு வருஷம் காத்திருந்தா... (பட்டிக்காட்டு பொன்னையா)


50. கேட்டுக்கோடி உருமி மேளம்... (பட்டிக்காட்டு பொன்னையா)


51. சிவகாமி ஆட வந்தாள்... (பாட்டும் பரதமும்)


52. மான்தோரண வீதியில்... (பாட்டும் பரதமும்)


53. நல்ல நாள்... (பொம்மலாட்டம்)


54. விழியே விழியே.... (புதிய பூமி)


55. சின்னவளை முகம்... (புதிய பூமி)


56. கண்ணே கனியே... (ரகசிய போலீஸ் 115)


57. என்ன பொருத்தம்... (ரகசிய போலீஸ்)


58. பால் தமிழ் பால்... (ரகசிய போலீஸ்)


59. நீ வரவேண்டும்... (ராஜா)


60. இரண்டில் ஒன்று... (ராஜா)


61. என் உள்ளம் உந்தன்... (ராமன் தேடிய சீதை)


62. திருவளர் செல்வியோ... (ராமன் தேடிய சீதை)


63. என்னடி மயக்கமா... (சவாலே சமாளி)


64. பொட்டு வைத்த முகமோ... (சுமதி என் சுந்தரி)


65. ஒரு தாரம் ஒரே தாரம்... (சுமதி என் சுந்தரி)


66. ஓ மேரி தில்ருபா... (சூரியகாந்தி)


67. பார்த்து கொண்டது... (தாய்க்கு தலைமகன்)


68. கன்னத்தில் என்னடி காயம்... (தனிப்பிறவி)


69. நேரம் நல்ல நேரம்... (தனிப்பிறவி)


70. ஒரே முறைதான்... (தனிப்பிறவி)


71. இடமோ சுகமானது... (தேடி வந்த மாப்பிள்ளை)


72. மாணிக்க தேரில்... (தேடி வந்த மாப்பிள்ளை)


73. கேட்டதெல்லாம் நான் தருவேன்... (திக்கு தெரியாத காட்டில்)


74. பொன்னம்மா மனம் எங்கு... (திருமாங்கல்யம்)


75. இரு மாங்கனி போல் இழை... (வைரம்)


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in