வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை ஒரே நேரத்தில் வெளியிடாமல், ஒவ்வொரு பாடலாக அதாவது சிங்களி ட்ராக் வெளியிடுவது இப்போது டிரெண்டாகி வருகிறது. அச்சம் என்பது மடமையடா பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாக இந்த உத்தி பெரிதும் உதவியது. இதே போல் நயன்தாரா நடிப்பில் தாஸ் ராமசாமி இயக்கி வரும் 'டோரா' படத்தின் பாடல்களையும் வெளியிட உள்ளனர்.
நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக முதல் பிரதி அடிப்படையில் 'சற்குணம் சினிமாஸ்' சார்பில் இயக்குநர் சற்குணம் தயாரித்து வரும் படம் இது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படமான டோராவில் நயன்தாராதான் ஹீரோ என்கிற அளவுக்கு முக்கியத்தும் உள்ள வேடத்தில் நடிக்கிறார். அவருடன் தம்பி ரமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விவேக் - மெர்வின் என்ற இரட்டையர்களள் இசை அமைக்கும் இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. டோரா படத்தின் பாடல்களை, சிங்கிள் டிராக்காக சோனி மியூசிக் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஒரு பாடல் விரைவில் வெளியகவிருக்கிறது. தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக அனைத்து பாடல்களும் வெளியாகவிருக்கின்றன.