2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராகவ். அவர் இப்போது ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதாவது தொடர்ந்து 100 நாட்களுக்கு கைத்தறி புடவைகள் அணிந்து அதனை செல்பி எடுத்து தனது பேஸ்புக் டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். இதற்கு 100 டேய்ஸ் சாரீஸ் என்று தலைப்பும் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராகவின் இந்த சேலை அணிவகுப்பு லைக்குகளை குவித்து வருகிறது.
"இப்போதெல்லாம் சேலை அணிவது குறைந்து வருகிறது. குடும்ப விழாக்களில் மட்டுமே சேலை அணிகிறார்கள். எல்லா நேரத்திலும் சேலை அணியவேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சியில் இறங்கினேன். நம் பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு சிறிய முயற்சி இது. இதை நான்தான் கண்டுபிடித்தேன் என்ற சொல்ல மாட்டேன், சில பெண்கள் பேஸ்புக்கில் இதற்கென தனி பக்கத்தையே உருவாக்கி படங்களை பதிவிட்டு வருகிறார்கள். நான் 100 நாள் 100 சேலை அணிகிறேன். இதற்கு 100 சேலை தேவையில்லை. ஒரே சேலையை இரண்டு விதமாக அணியலாம்" என்கிறார் ஐஸ்வர்யாராகவ்.