வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

கபாலி படத்திற்கு பிறகு தன்ஷிகா நடித்துள்ள படம் ராணி. இதனை சமுத்திரகனியின் உதவியாளர் பாணி இயக்கி உள்ளார். எஸ்.ஆர்.சந்தோஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார். தன்ஷிகாவுடன் பேபி வர்ணிகா, பேபி வர்ஷா, சங்கர் ஸ்ரீஹரி உள்பட பலர் நடித்துள்ளனர். ராணி படத்தின் கதை இதுதான்.
திருவண்ணாமலையை சேர்ந்த தன்ஷிகா தன் முறைப்பையனை காதலிக்கிறார். முறைப்பையன் மலேசியாவில் வேலை செய்கிறார். காதலுக்கு குடும்பத்துக்குள் எதிர்ப்பு வரவே தானும் மலேசியாவுக்கு சென்று விடுகிறார். அங்கு காதலரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார். இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்கொண்டு இருக்கும்போது திடீரென்று ஒரு நாள் கணவர் காணாமல் போகிறார். கணவரைத் தேடி அலைகிறார் தன்ஷிகா. அந்த தேடலில் பல சிக்கல்களை சந்திக்கிறார். அவரது இரட்டை குழந்தைகளுக்கும் ஆபத்து வருகிறது. தன் கணவனையும் கண்டுபிடித்து குழந்தைகளையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
தன்ஷிகாவின் கேரக்டர் பெயர் ராணி. திருவண்ணாமலையில் இருக்கும்போது கிராமத்து பெண்ணாகவும், மலேசியா சென்றதும் மார்டன் பெண்ணாகவும் மாறிவிடுகிறார். தன்ஷிகாவுக்கு சண்டை காட்சியெல்லாம் இல்லை. எல்லா பிரச்னைகளையும் தன் புத்திசாதுர்யத்தால் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் திரைக்கதை.