வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

முள்ளமுட்டில் புரொடக்ஷன் சார்பில் ரோஹித் மேத்யூ தயாரித்துள்ள படம் பட்டினப்பாக்கம். நடிகை பாவனாவின் அண்ணன் ஜெயதேவ் இயக்கி உள்ளார். கலையரசன், அனஸ்வரா, சாயாசிங், யோக்ஜேப்பி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். ராணா ஒளிப்பதிவு செய்துள்ளார், இஷான் தேவ் இசை அமைத்துள்ளார்.
இந்தப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்கு சென்றது. படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி தணிக்கை குழு யுஏ சான்றிதழ் கொடுத்தது. இதை எதிர்த்து படத்தயரிப்பாளர் ரிவைசிங் கமிட்டிக்குச் சென்றார். ரிவைசிங் கமிட்டி யு சான்றிதழுக்கு தகுதியான படம்தான் என்ற அறிவித்தது. அதை தொடர்ந்து தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்தது.
"குடும்ப கஷ்டத்தை போக்க ஹீரோ குறுக்கு வழியில் பணம் சமம்பாதிக்க நினைக்கிறார். அப்போது எதிர்பாராத ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. கடற்கரை பகுதி கதையின் களமாக இருப்பதால் அனைவருக்கும் தெரிந்த பட்டினபாக்கம் பெயரை படத்துக்கு வைத்தோம். படத்தில் நான்கு கதைகள் இருக்கிறது. அதில் ஒரு கதையில் வன்முறை அதிகமாக இருப்பதாக கூறித்தான் தணிக்கை குழு யுஏ கொடுத்தது. ஆனால் அந்த கதைக்கு அது தவிர்க்க முடியாதது என்று சொல்லி ரிவைசிங் கமிட்டியில் யு பெற்றோம்" என்கிறார் இயக்குனர் ஜெயதேவ்.