2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

கலைவாணி என்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எம்.வடிவேல் வாண்டையார் தயாரித்துள்ள படம் இதயத்திலிருந்து 6 கல். என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உதயராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹாசிகாதத் ஹீரோயின். இவர்கள் தவிர நிழல்கள் ரவி, யுவராணி, அஜய்ரத்னம், பாண்டு, அல்வா வாசு சிந்து ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆதி இசை அமைக்கிறார். ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்கிறார் கவுசல்யன் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: காதல் வாழ்க்கை என்ற விஷயத்தில் பிள்ளைகளும் பெற்றோரும் எப்படி இருக்க வேண்டும் என்ற கோணத்தில் உருவாகி இருக்கும் படம். வசன காட்சிகள் கும்பகோணம், மற்றும் பட்டீஸ்வரத்திலும் பாடல் காட்சிகள் இயற்கை எழில்நிறைந்த இடங்களிலும் ஒரே ஷெட்யூலில் நடைபெற்று முடிந்திருக்கிறது. யுகபாரதி எழுதியிருக்கும் அம்மாடி நீ சிரித்தாலே...... என்ற பாடல் கும்கியின் அய்யய்யய்யோ ஆனந்தமே வரிசையிலும் குட்டிகுரா போட்டவளே...... பாடல் மன்மதராசா மற்றும் ஊதாகலர் ரிப்பன் சாதனை வரிசையிலும் சரி ஹிட் ஆகும் என்று பாடல் பதிவின்போதும் படபிடிப்பின்போதும் தெரிந்துள்ளது. பாடல்கள் வெகுவிரைவில் வெளியாக உள்ளது என்றார்.




