2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

நடிகர் விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. இந்த படம் 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி வெளியானது. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தனா நடித்திருந்தார். அதன்பிறகு தேவா, விஷ்ணு, ரசிகன் என நடித்து வந்த விஜய்க்கு விக்ரம் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு பாசிலின் காதலுக்கு மரியாதையும் சூப்பர் ஹிட்டானது.
அதையடுத்து, ரூ.100 கோடி வசூல் சாதனை படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாகி விட்டார் விஜய். இந்நிலையில், நேற்று 2016 டிசம்பர் 4-ந்தேதியோடு விஜய் சினிமாவில் நடிக்க வந்து 24 ஆண்டுகள் முடிவடைந்து 25வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்திருக்கிறார். இதை கொண்டாடும் வகையில், நேற்று பல ஊர்களில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்பட் டுள்ளன. அதோடு, விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பல ஊர்களில் அன்னதான மும் செய்யப்பட்டுள்ளது.




