வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

நயன்தாரா நடித்தால் அந்த படம் ஹிட்டாகி விடும் என்கிற செண்டிமென்ட் காரணமாக அவரிடம் கால்சீட் கேட்டு தயாரிப்பாளர்கள் நீண்ட கியூவில் நிற்கின்றனர். ஆனால் அவரோ, முதலில் கதை. அது பிடித்து விட்டால்தான் சம்பளம், கால்சீட் பற்றியே பேசுவேன் என்று சொல்லிக்கொண்டு முதலில் கதையைத்தான் கேட்கிறார். அதுவும் முன்பெல்லாம் தான் கேட்டு பின்னர் தனது அபிமானிகளிடம் கலந்து பேசி முடிவெடுத்து வந்த நயன்தாரா இப்போது, தன்னிடம் கதை சொல்ல டைரக்டர்கள் தொடர்பு கொண்டாலே முதலில் விக் னேஷ் சிவனை போய் பாருங்கள் என்று திருப்பிவிடுகிறார்.
அதனால் இப்போது நயன்தாராவின் கால்சீட் வேண்டுவோர் விக்னேஷ்சிவனைத்தான் துரத்தி வருகிறார்கள். ஆனால், இப்படி நயன்தாராவின் கால்சீட்டுக்காக துரத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருப்பதால் ஏற்கனவே கேட்கப்பட்ட கதைகள் இன்னும் பல வெயிட்டிங்கில் உள்ளதாம். அதனால் புதிதாக கதை சொல்ல வருபவர்களிடம், இப்போதே கைவசம் டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம் என நான்கு படங்கள் உள் ளன. அதனால் இந்த படங்களை முடித்த பிறகுதான் கால்சீட் கிடைக்கும். அதுவும் நீங்கள் எதிர்பார்க்கும் தேதியில் கிடைக்காது. நாங்கள் முடிவு பண்ணும் தேதியில்தான் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்கிறார்கள். இருப்பினும், நயன்தாராவின் மார்க்கெட் கருதி பல டைரக்டர்கள் கதை சொல்லிவிட்டு வெயிட்டிங்கில் உள்ளனர்.