2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன். குடும்பப் பின்னணி கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அட்டகத்தி நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கும் நிலையில், அடுத்தபடியாக அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கயிருப்பதாக கடந்த மாதம் செய்தி பரவியது. பின்னர், விஜய்யிடம் நான் இன்னும் கதையே சொல்லவில்லை. அவரை சந்தித்தது கூட நட்புரீதியாகத்தான் என்று சொல்லி அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் செல்வராகவன்.
அதேபோல், செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கிறார் என்றொரு செய்தி கடந்த சில மாதங்களாகவே உலவிக்கொண்டிருந்தது. அதுதான் இப்போது உண்மையாகியிருக்கிறது. மேலும், செல்வராகவன் சீரியசான கதைகளை படமாக்குபவர், சந்தானம் காமெடி கலந்த கதைகளில் நடிப்பவர். எப்படி இவர் களின் கூட்டணி செட்டாகும்? என்ற கேள்விகள் ஒருபக்கம் எழுந்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் இணையும் புதிய படத்தின் பூஜை நேற்று நடந்தது. அதோடு, இந்த படத்திற்கு சந்தானத்தை மனதில் கொண்டு ரொமான்டிக் காமெடி கதையை உருவாக்கியிருக்கிறாராம் செல்வராகவன். அதோடு, சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், இந்த புதிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.




