2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் தமிழுக்கு வந்தவர் மும்பை நடிகை ஹன்சிகா. பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹிட் படங்களில் நடித்து வந்த வேகத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார். பின் னர் சிம்புவுடன் நடித்தபோது ஏற்பட்ட காதலினால் அவரது பயணத்தில் ஸ்பீடு பிரேக் ஏற்பட்டபோதும், தொடர்ந்து படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் ஹன்சிகா. தற்போது ரோமியோ ஜூலியட் படத்தை அடுத்து மீண்டும் அப் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக போகன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அப்போது, படங்களில் படுகவர்ச்சியாக வரும் ஹன்சிகா, உடம்பு முழுக்க புடவையால் போர்த்திக்கொண்டு வந்திருந்தார். அதோடு உடம்பையும் ஸ்லிம் பண்ணியிருந்தார். மேலும், வழக்கமாக மேடைகளில் ஓரிரு தமிழ் வார்த்தை களைகூட பேசாத ஹன்சிகா, இந்த போகன் மேடையில் முழுக்க முழுக்க தமிழில் பேசி அசத்தினார். அவர் பேசியதைக்கேட்ட ஜெயம்ரவி, பிரபுதேவா ஆகியோர் அவர் தமிழில் பேசியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.




