ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
சூர்யா தற்போது நடித்து வரும் சிங்கம் 3 படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:
நான் சினிமாவில் அறிமுகமானபோது சிங்கம் மாதிரி ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பேன் என்று கனவுகூட கண்டதில்லை. போலீசாக மக்கள் நம்மை ஏற்பார்களா என்ற தயக்கம் இருந்துது. காக்க காக்க படத்தில் என்னை போலீசாக நடிக்க வைத்து மக்கள் ஏற்றுக் கொள்ள வைத்தார் கவுதம் மேனன். அதன்பிறகு ஹரி. அவருடன் இதுவரை 5 படங்களில் இணைந்து பணியாற்றி விட்டேன். பாலச்சந்தர், பாரதிராஜா காலங்களில் ஒரு இயக்குனர், நடிகரும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது சாத்தியமாக இருந்தது, இப்போது அப்படி இல்லை. ஆனாலும் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இனியும் பணியாற்றுவோம்.
சிங்கம் படத்தை ஆரம்பித்தபோத இதன் இரண்டாம்பாகத்திலும் நடிப்பேன் என்று எதிபார்க்கவில்லை, இரண்டு பாகமுமே வெற்றி பெற்றது. ஹரி வெகுஜன மக்களின் ரசனைக்காக படம் எடுப்பவர். தான் இயக்கும் ஹீரோக்களை முதலில் அவர் ரசிப்பார். மக்களும் ரசிக்கிற மாதிரி அவர்களின் கேரக்டர்களை வடிவமைப்பார். இப்படித்தான் என்னை அவர் வடிவமைத்தார். சிங்கம் 3ம் பாகம் யோசனை வந்தது. ஆனால் சில வருடங்களுக்கு பிறகு பண்ணலாம் என்று நினைத்திருந்தோம். வேறு கதையில் நடிப்பதாகத்தான் இருந்தது. திடீரென்று ஒரு நாள் ஹரி வந்து சிங்கம் 3 பண்ணலாம். அதற்கு ஒரு ஒன்லைன் கிடைத்திருக்கிறது என்றார். அந்த ஒண் லைன் எனக்கும் பிடித்திருந்தது உடனே ஓகே ஆனது.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரும், ஆந்திராவில் என்.டி.ராமராவும் முதல்வராக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. தமிழ்நாட்டு போலீசார் ஆந்திராவுக்கு சென்று அதை சரிசெய்தார்கள். இது இரு மாநில முதல்வர்களும் எடுத்த முடிவு. அதை அடிப்படையா வைத்துதான் சிங்கம் 3 உருவானது, முந்தைய இரு பாகங்களை விட இதில் கூடுதலாக பல விஷயங்களை சேர்த்துள்ளோம். குறிப்பாக இந்த பகுதியில் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்கிறேன். சிங்கம் 3 தமிழக ரசிகர்களுக்கு நிச்சயம் நிறைவைத் தரும். என்றார் சூர்யா.