2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

நடிகர் சல்மான் கானுடன் திருமணம் நடக்க போவதாக வெளியாகி வந்த தகவல்கள் குறித்து லுலியா வென்சர் முதல் முறையாக மவுனம் கலைத்து பதிலளித்துள்ளார். ஹிமேஷ் ரேஸ்ஸாமியாவின் சமீபத்திய ஆல்பமான ஆப் சி மவுசிகு என்ற ஆல்பத்தில் எவ்ரி நைட் அன் டே என்ற பாடலை லுலியா பாடி உள்ளார். இந்தியில் தான் முதல் முறையாக பாடிய இந்த பாடலின் வெளியிட்டு விழாவில் லுலியா நேற்று கலந்து கொண்டார். அப்போது, சல்மான் கானுக்கும், அவருக்கும் இடையேயான உறவு பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அப்போது பதிலளித்த லுலியா, சல்மான் மற்றும் என்னை பற்றி ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு மீடியாவும் இதை திரும்ப திரும்ப கூறி கொண்டே இருக்கின்றன. ஆனால் நான் சொல்கிறேன், அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே. அதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல? அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏனெனில் நான் இந்தியா வருவதற்கு அவர் தான் காரணம். எனக்கு இந்தியா, அதன் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். நான் முதல் முறையாக இந்தியா வந்து விட்டு திரும்பும் போது அழுதேன் என்றார்.