2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

நடிகர் மன்சூரலிகான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் செல்லாத என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் அதைப் பற்றி பணக்காரர்கள் யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அப்பாவி மக்கள்தான் வங்கி வாசலில் வரிசையில் நிற்கிறார்கள். இந்த அறிவிப்பால் சினிமா தொழில் முடங்கி கிடக்கிறது. தியேட்டரில் வசூல் குறைந்து விட்டது, இதைப் பற்றி பேச சினிமாகார்களுக்கு தைரியம் இல்லை.
அதனால் நான் சொல்கிறேன். செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகள் பெட்ரோல் பங்கில், மெடிக்கல் ஸ்டோரில், அரசு அலுவகத்தில் செல்லும் என்பதை போல தியேட்டடர்களிலும் பழைய நோட்டுகளை கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தால்தான் சினிமா காப்பாற்றப்படும். பணத் தட்டுபாடால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அவர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள். இதனை சினிமா சங்கங்கள் மத்திய அரசிடம் வற்புறுத்த வேண்டும். இந்த அறிவிப்பால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னிடம் கருப்பு பணமும் இல்லை. கணக்கை பக்காவாக வைத்திருக்கிறேன். என்றார் மன்சூரலிகான்.




