தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கவலை வேண்டாம். படத்தின் கதையும், இரண்டை அர்த்த வசனங்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜீவா ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நான் இதுவரை 26 படங்களில் நடித்து விட்டேன். அதில் எத்தனை படங்கள் வெற்றி பெற்றது, எத்தனை படங்கள் தோல்வி அடைந்தது என்று எனக்குத் தெரியாது. அதுபற்றி எனக்கு கவலையும் இல்லை. எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறவன். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்.
சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. என்னை ஒரு நடிகனாக்கியது அமீர். ராம் படத்தில் என்னை நடிகனாக செதுக்கினார். அவர் மதுரைக்காரர் என்பதில் எனக்கு சந்தோஷம், மதுரை மக்களும், மதுரை கறிதோசையும் எனக்கு மிகவும் படிக்கும். மதுரை ரசிகர்களுக்கு ஒரு படம் பிடித்து விட்டால் அந்த படம் வெற்றி பெறும் என்பது என் கணிப்பு. என்றார் ஜீவா.