ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
எல்லா அம்சங்களும் நிறைவாக இருந்தும் ஒளிப்பதிவு சரியில்லாமல் படு தோல்வி அடைந்த படம் ராஜமுக்தி. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறைக்கு சென்று விட்டு வந்த பாகவதர் தயாரித்து நடித்த படம் இது. அவருக்கு ஜோடியாக பானுமதி நடித்தார். ராஜா சந்திரசேகர் இயக்கினார், சி.ஆர்.சுப்புராமன் இசை அமைத்திருந்தார். பாண்டுரங் நாயக் மற்றும் சுரேந்திரா பாய் ஒளிப்பதிவு செய்திருந்தனர்.
சிறையில் இருந்து வந்த பாகவதர் இந்தப் படத்தில் சில புதுமைகளை செய்ய முயன்றார். அப்போது ஹீரோயின்களை தொட்டு நடிப்பது புதிய பேஷனாகியிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் ஹீரோயின் பானுமதியை தொடாமல் நடித்தார். தொட்டு நடிப்பதற்கு ஒரு ஜோடி வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர், வி.என் ஜானகி ஜோடியை வைத்திருந்தார். தன்னை சிறைக்கு தள்ளிய தமிழ்நாடு பிடிக்காமல் புனேவில் உள்ள ஸ்டூடியோக்களில் படபிடிப்பு நடத்தினார்.
ஒளிப்பதிவாளர்கள் சிறப்பாக பணிபுரிந்தும், மும்பையில் நடந்த பிரிண்ட் பிராசசில் பிரிண்ட் சரியாக அமையவில்லை. பாதி காட்சிகள் இருட்டில் நடப்பது போன்று அமைந்து தெளிவில்லாமல் போய்விட்டது. பாகவதரின் பாடல்களும் சரியாக ஒலிப்பதிவாகாமல் போய்விட்டது. இதன் காரணமா படம் படுதோல்வி அடைந்தது. பாகவதர் படங்களில் தோல்வி அடைந்த படம் இது ஒன்றுதான்.