ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
சினிமா நட்சத்திரங்கள் சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கில அரசுக்கு எதிராக படங்கள் எடுத்தார்கள், பாட்டு பாடினார்கள். ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கியமானவர் கண்டசாலா. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் நேரடியாக பங்கேற்று 18 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார்.
ஆந்திர மாநிலத்தின் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கண்டசாலா முறைப்படி இசை கற்று பின்னணி பாடகர் ஆனார். சொர்க்க சீமா என்ற தெலுங்கு படத்தில் முதன் முறையாக பாடினார். லக்ஸ்ஸமா என்ற தெலுங்கு படத்திற்கு முதன் முறையாக இசை அமைத்தார். பாதாள பைரவி, லவகுசா, மாயக்குதிரை உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். "அமைதியில்லாத மனமே...", "உலகே மாயம் வாழ்வே மாயம்...", "ஆஹா இன்ப நிலாவினிலே...", "நீதானா என்னை அழைத்தது..." உள்ளிட்ட காலத்தால் அழிக்க முடியாத கானங்களை தந்தவர்.
திரைப்படங்களை தாண்டியும் அவரது பணிகள் விரிந்திருந்தது. தென்னிந்திய இசை கலைஞர்கள் சங்கத்தை உருவாக்கினார். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான இசை கலைஞராக இருந்தார். இளம் கலைஞர்களை ஊக்குவிக்க பல பயிற்சி பட்டறைகளை நடத்தினார். பத்மஸ்ரீ பட்டம் பெற்றார். குறுகிய காலத்தில் பெரும்புகழ் பெற்ற கண்டசாலா தனது 52வது வயதில் காலமானார். அவர் பிறந்த நாள் இன்று. அவர் இல்லாவிட்டாலும் அவர் பாடிய கானங்கள் காற்றில் கலந்து நம்மோடுதான் இருக்கிறது.