தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் |

வெங்கட் பிரபுவின் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ... சரக்கடிக்கும் காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். அவர் இயக்கிய 'சென்னை-600028' படம் தொடங்கி அனைத்து படங்களிலும் சரக்கடிக்கும் காட்சியை வைத்திருப்பார். வெங்கட்பிரபு தற்போது சென்னை - 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற 9-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
சென்னை -600028 முதல் பாகத்தில் நடித்த வெங்கட்பிரபுவின் ஆஸ்தான நடிகர் நடிகைகள் பெரும்பாலானவர்களுடன் ஒரு சில புதிய நடிகர், நடிகைகளையும் நடிக்க வைத்து இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. சென்னை - 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது. கங்கை அமரன் சென்சாரில் முக்கிய பதவியில் இருப்பதாலேயே யு சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சி தகவலும் தற்போது வெசளியாகி உள்ளது. அதாவது, இப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.