2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மும்பையில் நடைபெற்ற விழாவிற்குப் பிறகு படம் பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. ரஜினிகாந்தும் விழாவில் படத்தின் நாயகன் அக்ஷய் குமார்தான் என வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அக்ஷய் நடிக்கும் ஹிந்திப் படங்கள் எப்போதுமே வசூலில் அவ்வளவு தப்பு பண்ணியதில்லை. படங்களை வாங்குபவர்களுக்கு எப்படியாவது லாபம் கிடைத்துவிடும்.
ரஜினிகாந்தே படத்தின் நாயகன் அக்ஷய்தான் என்று சொன்னபிறகு ஹிந்தி வினியோகஸ்தர்களும் படம் மீது தங்களது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர். இதையடுத்து படத்திற்கான பட்ஜெட்டை தயாரிப்பு நிறுவனம் மேலும் 50 கோடி அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் விழா நடைபெற்றதே முற்றிலும் படத்தின் வியாபார நோக்கத்திற்கான விழாதான் என்கிறார்கள்.
படத்தின் ஆடியோவை இப்போதைக்கு வெளியிட வாய்ப்பில்லை. ஏனென்றால் ஏ.ஆர்.ரகுமானே படத்திற்காக இதுவரை ஒரு பாடல் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துவிட்டார். மற்ற பாடல்கள் பதிவு செய்யப்பட்டு, படமாக்கப்பட்டபின்தான் இசை வெளியீடு நடைபெறும். படமும் அடுத்த வருட தீபாவளிக்குதான் திரைக்கு வர உள்ளது.
படத்தின் அடுத்தடுத்த விழாக்களை, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நடந்த வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். வியாபார வரவேற்பு அதிகமாவதால் இயக்குனர் ஷங்கரும் இன்னும் தரத்தை எப்படி உயர்த்துவது என்று யோசித்து வருகிறாராம்.