இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனர் ஹரி, சூர்யாவின் கூட்டணி என்றாலே 'சிங்கம்' படம்தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். 'சிங்கம், சிங்கம் 2' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. அடுத்து மூன்றாம் பாகத்தை 'எஸ் 3' என்ற பெயரில் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்து பல காட்சிகளை ஆந்திரா, தெலுங்கானாவில் எடுத்தார்கள்.
படத்தின் வெளியீடு டிசம்பர் 16 என எப்போதோ அறிவித்துவிட்டார்கள். அதே சமயம் தெலுங்கில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடித்துள்ள 'துருவா' படத்தை டிசம்பர் 9ம் தேதி வெளியிட முடிவு செய்த பின் 'எஸ் 3' படத்தை ஒரு வாரம் கழித்து வெளியிட சிரஞ்சீவி தரப்பில் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், 'எஸ் 3' தயாரிப்பாளர்களோ, தமிழில் அனைவரிடம் சொல்லியாகிவிட்டது. படத்தை தள்ளி வைக்கவே முடியாது என சொல்லியதாக தகவல்கள் வெளியாகின.
இப்போது 'துருவா' படத்தின் டிரைலர் வெளியாகி புதிய சாதனை படைத்து வருவதால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் படத்தை வெளியிட பல தியேட்டர்காரர்கள் முன் வந்துவிட்டனர். அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிட முடிவு தயாரிப்பாளர் தரப்பிலும் களமிறங்கிவிட்டார்கள். அதனால், 'எஸ் 3' படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது சிக்கலாகியிருக்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் 'டிமானிடைசேஷனுக்குப்' பிறகு வெளியாகும் படங்கள் வசூலில் பெரிய வேட்டையை நடத்த முடியாமல் தவிப்பதால் சூர்யாவின் 'எஸ் 3' வசூல் வேட்டைக்கும் பாதிப்பு வந்துவிடுமோ என யோசித்தார்களாம். அது மட்டுமல்லாமல் டிசம்பர் 16ம் தேதி பள்ளிகளில் அரையாண்டு பரீட்சை வேறு நடக்கும் சமயம் என்பதால் வினியோகஸ்தர்களும் 23ம் தேதியே நன்றாக இருக்கும் எனக் கேட்டுக் கொண்டதால் படத்தை டிசம்பர் 23க்கு மாற்றியிருக்கிறார்கள்.
'துருவா' டிரைலருக்கு தெலுங்குத் திரையுலகில் கிடைத்த மிகப் பெரும் வரவேற்பே 'எஸ் 3' படத்தைத் தள்ளி வைக்கக் காரணம் என டோலிவுட்டில் பேச்சாக இருக்கிறது.