கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல |

வித்யூத் ஜம்வால் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த படம் ‛கமாண்டோ. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. வித்யூத்தே ஹீரோவாக நடிக்க, இஷா குப்தா, அடா சர்மா ஹீரோயின்களாக நடிக்கிருக்கிறார்கள். ‛கமாண்டோ 2 படத்தை இயக்குநர் தேவன் போஜனி இயக்குகிறார். பேன்தோம் நிறுவனம் சார்பில் விபுல் அமுருதுலால் ஷா மற்றும் தவால் ஜெயந்திலால் இருவரும் ‛கமாண்டோ 2 படத்தை தயாரிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் ‛கமாண்டோ 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை மற்றி இருக்கிறது படக்குழு.
சமீபத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற ‛கமாண்டோ 2 படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரில் 6ல் இருந்து மார்ச் 3ஆம் தேதிக்கு தள்ளி போக இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஏனென்றால் ஜனவரி மாதம் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் ‛டங்கல்' படம் வெளியாவது தான் என்றும், அவரின் படம் திரைக்கு வந்தால் ஒரு மாதம் தொடர்ந்து ஹிட் கொடுக்கும் என்பதால் தான் ‛கமாண்டோ 2 படத்தின் ரிலீஸ் தேதியை தாங்கள் மாற்றியிருப்பதாக கூறியுள்ளனர்.