தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் |

இயக்குனர் செல்வராகவன் இரண்டாம் உலகம் தோல்விக்கு பிறகு படம் இயக்காமல் இருந்தார். தற்போது நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்குகிறார். இதற்கு முன்பு அவர் விக்ரம் நடிப்பில் சிந்துபாத் என்ற படத்தை தொடங்கினார். இந்தப் படத்தை போக்கிரி, நம்நாடு, ராமச்சந்திரா, பரமசிவன் படங்களை தயாரித்த ஸ்ரீகனகரத்னா மூவிஸ் சார்பில் ரமேஷ்பாபு தயாரித்தார்.
ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்த நிலையில் செல்வராகவனுக்கும், விக்ரமிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட படம் டிராப் ஆனது. இதில் தயாரிப்பாளர் ரமேஷ்பாபுக்கு கோடிக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இயக்குனர் செல்வராகவனுக்கு சம்பள முன்பணமாக ஒரு கோடி கொடுத்திருந்தார். படம் டிராப் ஆனதால் அந்த முன்பணத்தை தயாரிப்பாளர் ரமேஷ்பாபு திருப்பிக் கேட்டார். அதற்கு செல்வராகவன் எந்த பதிலும் தரவில்லை. இதனால் தற்போது தயாரிப்பாளர் ரமேஷ்பாபு செல்வராகவன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் தனது ஒரு கோடி ரூபாயை செல்வராககனிடமிருந்து வாங்கித் தருமாறு புகார் அளித்துள்ளார்.