தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் |

அடையாறு பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் ஒளிப்பதிவாளருக்கு படித்து விட்டு ராஜீவ் மேனின் உதவியாளராக இருந்த நரேன், நிழல்கூத்து என்ற மலையாளப் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதிலிருந்து நடிப்பு ஆர்வம் அதிகமாக 4 தி பீப்பிள், பை த பீப்பிள், கிளாஸ் மேட் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். சித்திரம் பேசுதடி தமிழ் படத்தின் மூலம் ஹீரோவானார். அதன்பிறகு அஞ்சாதே படம் அவரை பிரபலமாக்கியது.
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருக்க வேண்டியவர் திடீரென்று ஆக்ஷன் ஹீரோவாக முடிவு செய்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய நெஞ்சிருக்கும்வரையில் ஆக்ஷன் ஹீரோவானார். அதன்பிறகு பள்ளிக்கூடம், தம்பிக்கோட்டை, படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு உதவவில்லை. முகமூடி படத்தில் வில்லனாக நடித்தார் அதுவும் ஓடவில்லை. அதன் பிறகு மலையாளப் படங்களில் நடிக்கச் சென்று விட்டார். சிறிய இடைவெளிக்கு பிறகு கத்துக்குட்டி படத்தில் நடித்தார். அது ஒரளவுக்கு அவருக்கு ஒரு ரீ எண்ட்ரியை கொடுத்தது.
தற்போது ரம் படத்தில் நடித்து வருகிறார். இதில் நரேன் ஹீரோ இல்லை. அனிருத்தின் கசின் பிரதர் ரிஷிகேஸ்தான் ஹீரோ, நரேன் இரண்டாவது ஹீரோ. மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்திருக்கிறார் நரேன். ரம் படத்திலிருந்து தனது புதிய பயணத்தை தொடங்குவாரா? ரம் அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.