தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் |

கன்னடத்தில் வெளியான யூ டேர்ன் படத்தில் அறிமுகமான ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு இப்போது தமிழில் நான்கு படங்கள். இவன் தந்திரன் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடி, விக்ரம் வேதாவில் மாதவன் ஜோடி, நிவின் பாலிக்கு ஜோடியா ஒரு படம் இதற்கிடையில் மணிரத்னம் இயக்கும் காற்றவெளியிடை படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு கெஸ்ட் ரோல் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கூறியதாவது:
காற்று வெளியிடையில் ஒரு ராணுவ அதிகாரியின் மகளாக நடிக்கிறேன். கெஸ்ட் ரோல்னு சொல்றாங்க. அப்படி இல்லை. என்ன மாதிரியான ரோல்னு இப்போது சொல்ல முடியாது. கெஸ்ட் ரோல்ல நடிக்க மணிசார் கூப்பிட்டிருந்தாலும் நான் நடிச்சிருப்பேன். மணிசார் படத்துல நான் நடிக்கிறேன் என்பதே பெருமையான விஷயம்தான். அந்தப் படத்தில் முதல் நாள் நடித்தபோது அப்படியரு பாசிட்டிவ் வைப்ரேஷன். ஆர்ட்டிஸ்டுகளுக்கு மரியாதை தர்ற அற்புதமான இயக்குனர் அவர். இப்போது கார்த்தியும் நல்ல பிரண்டாயிட்டார்.