தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் |

தணிக்கை செய்யப்பட்டும் 400 படங்கள் வெளிவரமுடியாமல் முடங்கிக் கிடக்கின்றன என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்தார். அவரது மகன் லுத்புதீன் ஹீரோவா நடித்துள்ள பறந்து செல்லவா படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழாவில் நாசர் பேசியதாவது:
கலைத்துறையில் கால் நூற்றாண்டை கடந்தவன் நான். திரைத்துறை எப்படி வளர்ந்தது, எப்படி பாதிக்கப்பட்டது. இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்ற அனைத்தும் எனக்கும் தெரியும். அந்த வகையில் ஒரு சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் 4 படங்களை தயாரித்தவன். அதில் நிறைய இழந்தவன். இப்போது படம் எடுப்பது சிரமமே இல்லை 10 லட்சத்திலும் படம் எடுக்கலாம், 100 கோடியிலும் படம் எடுக்கலாம். ஆனால் அதை வெளியிடுவதுதான் இன்றைக்குள்ள பெரும் பிரச்சினை. எனக்குத் தெரிந்து சமீப காலங்களில் தயாராகி, தணிக்கை செய்யப்பட்ட சுமார் 400 படங்கள் வெளிவரமுடியால் முடங்கிக் கிடக்கிறது. சிறிய படங்களுக்கு தாணு போன்ற தயாரிப்பாளர்களை கை கொடுப்பதுதான் இன்றைக்கு இருக்கிற ஒரே ஆறுதலான விஷயம். என்றார் நாசர்.