2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பூனையை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் மியாவ். குளோபல் வுட் மூவீஸ் சார்பில் வின்செண்ட் அடைக்கலராஜ் தயாரிக்கிறார். பிரபல விளம்பர பட இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி இயக்கி உள்ளார், ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா பேபி யுவினா நடித்துள்ளனர்.
இந்தப் படம் தணிக்கைக்கு சென்றபோது தணிக்கை குழு படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தது. பதறிப்போனார் தயாரிப்பாளர் "குழந்தை ஆடியன்சை மனதில் வைத்து படத்தை தயாரித்துள்ளோம் ஏ சான்றிதழ் கொடுத்தால் எப்படி?" என்று வாதிட்டார். ஆனால் படத்தில் பூனை கொடூரமாக பழிவாங்குகிறது இதை எப்படி குழந்தைள் பார்க்க அனுமதிக்க முடியும் என்றனர் தணிக்கை குழுவினர்.
இதனால் படத்தை மறு தணிக்கைக்கு கொண்டு சென்றனர். படத்தை பார்த்த மறுதணிக்கை குழு பூனை பழிவாங்கும் காட்சிகளில் 3 காட்சிளை மென்மையானதாக்கி மாற்றி அமைத்தால் யுஏ தருகிறோம் என்றார்கள். இதனால் பூனை கொடூரமாக தாக்கும் காட்சியை எளிமையாக்கினார்கள். அதன் பிறகு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.