2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

2010-ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலானார். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ரம்பா, அவ்வப்போது சில டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார். ரம்பாவிற்கு 2011-ம் ஆண்டு லாண்யா என்ற பெண் குழந்தையும், 2015-ம் ஆண்டு சாஷா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.கணவர் இந்திரன் உடன் 6 ஆண்டுகாலம் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ரம்பாவின் இல்லற வாழ்வில் புயல் வீசியது. ஆம், இந்திரன்-ரம்பா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் இனியும் என்னால் என் கணவரை விட்டு பிரிந்து வாழ முடியாது, அவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று கூறி இருந்தார்.
நடிகை ரம்பா தனது கணவர் இந்திரன் சேர்த்து வைக்கக்கோரிய தொடர்ந்த வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மாதம் ரூ2.5லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் நடிகை ரம்பா தரப்பு மனுவில் கேட்கப்பட்டிருந்தது. ரம்பா ஆஜராகாததால் வழக்கை ஜனவரி 21க்கு ஒத்திவைத்தது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.கணவரை சேர்த்து வைக்கக்கோரி, நடிகை ரம்பா குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்து இருந்தார். கணவர் குடித்துவிட்டு அடித்ததாலும், தமது 2பெண் குழந்தைகளையும் மாமியார் குடும்பத்தினர் ஏற்காததாலும் பிரிந்த வந்ததாக கூறியிருந்தார். வழக்கு முடியும் வரை செலவுக்காக மாதம் தோறும் ரூ.2.5லட்சம் ஜீவனாம்சம் அளிக்க கணவருக்கு உத்தரவிடுமாறு ரம்பா தன் மனுவில் கேட்டிருந்தார். இந்த மனு இன்று விசாரனைக்கு வந்தது நடிகை ரம்பா ஆஜராகவில்லை. பணிச்சுமை காரணமாக வழக்கில் தான் ஆஜராக முடியவில்லை என்றும், விசாரணையை ஒத்திவைக்குமாறும் ரம்பா தரப்பு கோரிக்கை விடுத்தது. வழக்கில் தாங்களும் மனு தாக்கல் செய்ய இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க ரம்பா கணவர் தரப்பில் கேட்கப்பட்டது. தற்போது ரம்பா தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சிகான பணியில் இருப்பதால் தானும், தன் குடும்பை சார்ந்த யாரும் கோர்ட்டிற்கு செல்லவில்லை என்றும், தனக்கு இவ்வாறு செய்திகள் பரவி வருவதும் தெரியாது என ரம்பா கூறியுள்ளார்.