2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

வெங்கட்பிரபு தற்போது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் முதல் பாகத்தில் நடித்த ஜெய், விஜய் வசந்த், பிரேம்ஜி, விஜயலட்சுமி உள்ளிட்ட அனைவரும் நடிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கிறார். அடுத்த வாரம் படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் உதவியுடன் படத்தை பேஸ்புக் வழியாக புரமோட் செய்கிறார்கள். படத்துக்கென்று தனியாக பேஸ்புக் தொடங்கியுள்ளனர். இதில் நேற்று தங்கள் படம் பற்றிய நேரலை ஒன்றை ஒளிபரப்பினார்கள். பேஸ்புக்கின் இந்திய தலைமையிடமாக ஐதராபாத்திருந்து இதனை ஒளிபரப்பினார்கள். இது பேஸ்புக் பயன்படுத்துவோரிடம் மிகுந்த பாராட்டுதலை பெற்றுள்ளது.
"இப்போது எதையாவது புதுமையாக செய்ய வேண்டும். இருக்கிற நவீன வசதிகளை படத்தின் புரமோசனுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில்தான் நாங்கள் பேஸ்புக்கை பயன்படுத்தினோம். இதை ஆரம்பித்து வைத்தது நாங்கள்தான் என்பதில் எங்களுக்கு பெருமை. இனி இதை அனைவரும் பின்பற்றுவார்கள். இந்த நேரலையில் ஒரு போட்டியும் நடத்தினோம். அதில் வெற்றி பெற்றவர்களில் 11 பேரை தேர்வு செய்து அவர்களுடன் சென்னை 28 அணி கிரிக்கெட் விளையாட இருக்கிறது. ஜெயித்தாலும் தோற்றாலும் பரிசு அவர்களுக்குத்தான்" என்கிறார் வெங்கட்பிரபு.