2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் இதுவரை 9 படங்களில் நடித்து முடித்து விட்டார். இயக்குனர் எழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடிக்க விஷ்ணுவிடம் கதை சொன்னார். தயாரிப்பாளர் யார் என்று கேட்டார். தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார் எழில். தேட வேண்டாம் நானே தயாரிக்கிறேன். என்றார் விஷ்ணு விஷால் இப்படி திடீர் தயாரிப்பாளராள விஷ்ணு இப்போது முழுநேர தயாரிப்பாளராகிவிட்டார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோ என்பது அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்.
தற்போது கதாநாயகன் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியரும், எழிலின் உதவியாளருமான செல்வா இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தையும் விஷ்ணுவே தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் விஷ்ணுவுடன் கருணாகரன், ஆனந்தராஜ், யோகி பாபு நடிக்கிறார்கள். படத்தின் பெயரும், ஹீரோயினும் இன்னும் முடிவாகவில்லை. லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். ஷக்தி ஒளிப்பதிவு செய்கிறார். "சிறிய பட்ஜெட், குறைவான லாபம்" இதுதான் விஷ்ணு விஷால் ஸ்டூடியோவின் தாராக மந்திரம்.