2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

மகாபிரபு, செல்வா, ஏய், சாக்லெட், பகவதி, குத்து, சாணக்யா உள்ளபட 22 படங்கள் இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். தற்போது 23வது படமாக நேத்ராவை இயக்கி வருகிறார். இதில் வினய், சுபிக்ஷா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு கனடாவில் நடக்கிறது.
"தமிழ் நாட்டிலிருந்து கனடாவுக்கு செல்லும் ஒரு இளம் தம்பதிகள் அங்கு சந்திக்கும் விபரீதங்களும், அதை அவர்கள் எதிர்கொள்வதும்தான் கதை. கதையை கேட்டதும் கனடாவைச் சேர்ந்த பா.ராஜசிங்கம் தயாரிக்க முன்வந்தார். சென்னை படப்பிடிப்பை முடித்து விட்டோம், விரைவில் கனடா செல்ல இருக்கிறோம். நான் இதுவரை பக்கா கமர்ஷியல் படம்தான் இயக்கியிருக்கிறேன். இது த்ரில்லர் பிளஸ் காமெடி படம். ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன் இணைந்து காமெடியில் கலக்குகிறார்கள்" என்கிறார் ஏ.வெங்கடேஷ்.