2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

முன்பெல்லாம் ஹீரோக்களின் சம்பளம் மட்டும்தான் கோடி கணக்கில் இருக்கும். அதன் பிறகு நயன்தாரா, அனுஷ்கான மாதிரியான நடிகைகள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார்கள். இப்போதெல்லாம் இயக்குனர்களும் கோடி கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
கடந்த சில ஆண்டுகள் வரை ஒரு நடிகர் ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார் என்றால் அந்தப் படத்தின் இயக்குனருக்கு 10 லட்சத்துக்குள்தான் சம்பளம் இருக்கும். ஆனால் இப்போது நிலைமை வேறு. ஹீரோக்களுக்கு நிகராகவும், அவர்களை விடவும் அதிகமாக சம்பளம் கேட்கிறார்கள். இதை தொடங்கி வைத்தவர் ஷங்கர். கோடியில் சம்பளம் வாங்கிய முதல் இயக்குனர் அவர்தான். இப்போதைக்கு டாப்பில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 50 கோடி சம்பளம் லாபத்தில் பங்கு என்பதுதான் அவரது டீலிங். அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் கோடிக்குள் வந்தார், இன்றைய நிலவரப்படி பிரபு தேவா, அட்லி, ஹரி, ஏ.எல்,விஜய், மோகன் ராஜா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கோடியில் சம்பளம் வாங்குகிறார்கள்.
2.ஓ படத்துக்கு ஷங்கருக்கு 20 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படத்துக்கு அட்லிக்கு 13 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. சிங்கம் 3 படத்துக்காக ஹரிக்கு 10 கோடி சம்பளம் என்கிறார்கள். ஒருபுறம் படத்தின் தயாரிப்பு செலவுகளை குறைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்., இன்னொரு புறம் ஹீரோக்களின் சம்பளத்துக்கு நிகராக இயக்குனர்களின் சம்பளம் உயர்ந்து வருகிறது.