2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கேரளநாட்டிளம் பெண்களுடனே படத்தில் அறிமுகமானவர் அபி சரவணன். அவர் நடித்துள்ள பட்டதாரி படம் சமீபத்தில் வெளிவந்தது. இரு படங்களுமே வெற்றி பெறவில்லை என்றாலும் அபி சரவணன் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பிளஸ் ஆர் மைனஸ், சாயம், எதிர்கொள், விசிறி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தவிர பிரேம சிறுக்கன் என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். முதல் படத்தில் நடித்த காயத்ரியுடன் காதல், பட்டதாரி படத்தில் நடித்த அதிதியுடன் காதல் என காதல் கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: பொதுவாக பெரிய நடிகர்களுக்குத்தான் இதுபோன்ற கிசுகிசுக்கள் வரும் வளர்ந்து வரும் என்னை பற்றி வருவது சந்தோஷமாக இருந்தாலும். இன்னொரு பக்கம் கவலையாக இருக்கிறது. காரணம் அதில் எதுவும் உண்மையில்லை. பாவம் அந்த பெண்கள் சங்கடப்படுவார்களே என்ற கவலை அது. எல்லோருடனும் நட்பாக பழகுவேன் அது தவறாக பார்க்கப்படுகிறது.
நான் மதுரைக்கார பையன். சினிமாவில் நடிக்கும் ஆசையில் குடும்பத்தை பிரிந்து சென்னைக்கு வந்தேன். அட்டகத்தி படத்தில் தினேஷ் நண்பனாக அறிமுகமானேன், கடினமான போராட்டத்துக்குப் பிறகு ஹீரோவானேன். இப்போது பல படங்களில் நடித்து வருகிறேன். நான் தவறான நடிகராக இருந்தால் இத்தனை வாய்ப்புகள் கிடைக்குமா? என்கிறார் அபி.சரவணன்.