ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? |

ஜெண்டில்மேன் படத்தையடுத்து ஷங்கர் இயக்கிய இரண்டாவது படம் - காதலன். 1994-ஆம் ஆண்டு வெளியான படம் 'காதலன்' படத்தில் தான் பிரபுதேவா ஹீரோவாக உருவெடுத்தார். அவருக்கு ஜோடியாக நக்மா நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி இப்படத்தின் வெற்றிக்கு காரணமானது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற 'டேக் இட் ஈஸி ஊர்வசி...' என்ற பாடல் சூப்பர்டூப்பர் ஹிட்டாகி காதலன் படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங்கை தேடிக் கொடுத்தது.
22 வருடங்களுக்குப் பிறகு இந்த பாடலை தற்போது ஒரு இசை நிகழ்ச்சியில் மீண்டும் மேடையேற்றவிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்! அதே நேரம், இந்த பாடலின் சரணத்தில் சில மாறுதல்களை செய்யவும் இருக்கிறாராம். அதாவது இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு பாடல்வரிகளை மாற்றி உருவாக்க திட்டமிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த மாற்றத்தில் ரசிகர்களும் பங்குபெற்று சுவாரஸ்யமான, நகைச்சுவயான வரிகளை எழுதி தரலாம் என்று சமூகவலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அதே நேரம் கண்டிஷன் அப்ளையையும் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்!
அதாவது நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் களம் இறங்கிய ஹிலாரி க்ளின்டன், ட்ரம்ப்பை விமர்சிப்பது போலவோ, 500,1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக அறிவித்த மோடியையோ விமர்சிப்பதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். ஹிலாரி க்ளின்டன், ட்ரம்ப்பை விமர்சித்தால் அடிக்கடி அமெரிக்கா சென்று வரும் தனக்கு சிக்கல் வரும் என்பதாலேயே இந்த நிபந்தனைகள்.