2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

நடிகை வித்யா பாலன் தற்போது, தான் நடித்த கஹானி 2 படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இவர் தற்போது, பூஷண் குமாரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இந்த படத்தில் சுலோச்சனா என்ற சுலு என்கிற ஆர்.ஜே., கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் துமாரி சுலு என்ற நடுத்தர வயதினருக்கான நள்ளிரவு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆர்ஜே.,வாக வித்யாபாலன் நடிக்கிறாராம். இப்படத்திற்கு தும்மாரி சுலு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சுரேஷ் திரிவேணி என்ற விளம்பர பட இயக்குனர், இயக்குகிறார். இப்படத்தின் வேலைகள் ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளது. இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். வித்யா பாலன் ஆர்ஜே.,வாக நடிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் லேகி ரஹோ முன்னா பாய் என்ற படத்தில் வித்யா பாலன் ஆர்ஜே.,வாக நடித்துள்ளார்.