2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சின்ன நடிகர்கள் சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக தங்களை தாங்களே சூப்பர் ஸ்டார்.. லிட்டில் சூப்பர் ஸ்டார்... யங் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார்.
இதற்கு உதாரணங்கள் தேவையில்லை என்றாலும், பல்வேறு விஷயங்கள் இதை நிரூபித்துக் கொண்டே வருகின்றன. ரஜினிகாந்தின் 'கபாலி' டீஸர்தான், இந்திய சினிமாவிலேயே முதன் முதலில் யு டியூபில் 3 கோடி ஹிட்ஸை எட்டிய முதல் டீஸராக சாதனை புரிந்தது. 'கபாலி'யின் ரெக்கார்டை முறியடித்து இந்திய அளவில் அதிக பார்வையிடல்களைப் பெற்ற டிரைலாக சல்மான்கான் நடித்த 'சுல்தான்' படத்தின் டிரைலர் சாதனை புரிந்தது.
தற்போதுவரை 'சுல்தான்' படத்தின் டிரைலரை 3 கோடியே 43 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர். 'கபாலி' டீஸரை 3 கோடியே 28 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்.
இந்நிலையில், 'சுல்தான்' டிரைலர் சாதனையை சமீபத்தில் வெளியான அமீர் கானின் 'தங்கல்' படத்தின் டிரைலர் முறியடித்து சாதனை படைத்துள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட 'தங்கல்' டிரைலர் இரண்டு வாரங்களுக்குள்ளாகவே 3 கோடியே 44 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதனால், அமீர் கான், சல்மான் கான், ரஜினிகாந்த் படங்களின் டிரைலர்/டீஸர்கள்தான் யு டியூபில் சாதனை படைத்திருக்கின்றன.