2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

விஜய் நடிக்கும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.அதோடு, பைரவா படத்தின் வியாபர விஷயங்களும் சூடு பிடித்துள்ளன.
'பைரவா' படத்தின் தமிழக விநியோக உரிமையை ஸ்ரீகிரீன் புரடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது.தற்போது ஏரியாவாரியாக பிரித்து விற்கும் வேலை சூடுபிடித்துள்ளது.
கோவை விநியோக உரிமையை என்.எச்.மீடியா என்ற நிறுவனம் வாங்கியிருக்கிறது.ரஜினி நடித்த 'கபாலி', சசிகுமாரின் 'கிடாரி' உட்பட பல படங்களை வாங்கி கோயம்பத்தூரில் விநியோகம் செய்த இந்நிறுவனம் இது.
தற்போது 'பைரவா' படத்தின் கோவை ஏரியாவின் விநியோக உரிமையை 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. ரஜினியின் 'கபாலி' படத்திற்கு அடுத்த படியாக அதிக விலைக்கு வாங்கப்பட்ட படம் 'பைரவா' படம்தான்!வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் 12 ஆம் தேதி 'பைரவா' படம் வெளியாக உள்ளது.விரைவில் பைரவா படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்