2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தற்போதைய சூழலில் ஒரு படத்தை வெளியிடுவது லேசுப்பட்ட காரியம் இல்லை.கள்ளக்கணக்கு காட்டாத, நம்பகமான விநியோகஸ்தர்கள் அமைய வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு.
படத்தை வாங்கி வெளியிடுபவர்களுக்கும், தியேட்டர்களுக்கும் லாபம் கிடைக்க வேண்டும் என்பது விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பு.இந்த இரண்டும் அமைவது சாதாரண விஷயமில்லை. அந்தவகையில், சசிகுமார் அர்ஷ்டசாலிதான்.
அவரது நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'கிடாரி' படத்தை வசுந்தரா தேவி சினி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் வாங்கி வெளியிட்டது.கிடாரி படம் வசுந்தரா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு நல்ல லாபம் சம்பாதித்து கொடுத்தது.
குறிப்பாக, பி அன்ட் சி திரையரங்குகளில் இப்படம் பெரிய வசூலைக் குவித்தது. இதனால், தற்போது சசிகுமார் தயாரித்து நடித்திருக்கும் 'பலே வெள்ளையத் தேவா'வின் தமிழ்நாடு திரையரங்க உரிமையையும் வசுந்தரா தேவி சினி ஃபிலிம்ஸ் நிறுவனமே ஆர்வத்துடன் வாங்கியிருக்கிறது. சோலை பிரகாஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படம் முழுநீள காமெடிப்படமாக உருவாகியிருக்கிறது இதில் சசிகுமாருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.'பலே வெள்ளையத் தேவா' படத்தை கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 23 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார் சசிகுமார். 2016 ல் சசிகுமாரின் நடிப்பில் வெளிவரும் 5ஆவது படம் 'பலே வெள்ளையத் தேவா'.