2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

அமீர் நாயகனாக நடித்த யோகி படத்தில் நடிகராக அறிமுகமான பாடலாசிரியர் சினேகன், அதன் பிறகு உயர்திரு-420 என்ற படத்தில் நாயகனாக நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் கடைசியாக ராஜராஜ சோழனின் போர்வாள் என்றொரு சரித்திர படத்தில் நடித்து வந்தார். அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அப்படத்தில் பூஜை அன்று தஞ்சாவூரில் பொதுமக்கள் முன்னிலையில் பாடல் கம்போஸிங் செய்தார் இளையராஜா. அதே இடத்தில் பாடல் எழுதிக்கொடுத்தார் சினேகன்.
அப்படி அந்த படத்திற்கு புதுமையான ஒரு ஓப்பனிங்கை கொடுத்தனர். ஆனால், முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அதன்பிறகு பைனான்ஸ் பிரச்சினையால் அந்த படம் டிராப் ஆனது. இந்த நிலையில், தற்போது பொம்மி வீரன் என்றொரு படத்தில் நடித்து வருகிறார் சினேகன். இந்த படம் ஹாரர் கதையில் உருவாகி வருகிறது. குறிப்பாக, சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படம் பாணியில் இந்த படத்தின் கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, அரண்மனை படத்தில் எப்படி ஒரு அரண்மனையை மையப்படுத்தி கதை இருந்ததோ அதேபோல் இந்த பொம்மி வீரன் படம் ஒரு பங்களாவை மையப்படுத்தி உருவாகி வருகிறது. ஒரு பேய் பங்களாவை விற்பனை செய்ய எடுக்கும் முயற்சிகளும், அந்த பங்களாவை வாங்க உள்ளே செல்பவர்களை அதற்குள் இருக்கும் பேய் என்னென்ன செய்கிறது என்பதுதான் இந்த படமாம். அந்த வகையில், பேயின் அட்டகாசம், காமெடி கலந்த கதையில் சினேகனின் பொம்மி வீரன் உருவாகிக்கொண்டிருக்கிறது.