2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

நடிகர் அஜித்குமார் தனது ஒவ்வொரு படங்களும் ரிலீசானதும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை பல ஆண்டுகளாக கடை பிடித்து வருகிறார். தான் பெரிதாக பிரபலமாகாத காலத்தில், பல மைல் தூரம் கால்நடையாகவேகூட சென்று வந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக பொது மக்கள் அதிகம் கூடாத நாளாக பார்த்து சத்தமில்லாமல் சென்று வருகிறார்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனும் ரெமோ படம் வெற்றி பெற்றதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும், இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் தெலுங்கில் வெளியாகாத நிலையில், ரெமோ படத்தை முதன்முதலாக தெலுங்கில் டப் செய்து வெளியிட்டுள்ளனர். அங்கும் ரெமோ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். அதனால் அந்த கோயில் வளாகத்திற்குள் அவர் சென்றபோது ஏராளமான ரசிகர்கள் திரண்டு அவரை சூழ்ந்து கொண்டார்களாம. அதையடுத்து அவர்களுடன் நீண்டநேரம் நின்று செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.