பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |

சேனா, காதல் வானிலே உள்பட சில படங்களில் பாடல் எழுதியவர் கவிக்குமார். அதையடுத்து ஆர்.வி.ஆர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அஞ்சுக்கு ஒன்னு படத்திலும் திருவிழா, சூட்சுவேசன் பாடல் என இரண்டு பாடல்களை எழுதினார். இந்த பாடல்களில் திருவிழா பாடலில் அவர் இரட்டை அர்த்த வார்த்தைகளை எழுதியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அதுகுறித்து கவிக்குமாரிடம் கேட்டபோது, அஞ்சுக்கு ஒன்னு படத்திற்காக தேனி வீரபாண்டி கோயிலில் கரகாட்ட கோஷ்டி ஆடும் பாடலில் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக யதார்த்தமான வார்த்தைகளைக் கொண்டு பாடல் எழுதினேன். அதில் விரசமான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். அதாவது, அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுகா -என்று அந்த பாடல் தொடங்கும். கட்டிட தொழிலாளர்கள் வேலைப்பளு இல்லாமல் இருக்க இரட்டை அர்த்த வார்த்தைகளை ஜாலியாக பேசியபடியே வேலை செய்வதுண்டு.
குறிப்பாக, மற்ற தொழிலாளர்களை விட கொத்தனார்கள் கையில் காசு இல்லையென்றால் அவர்களை நாட்களை நகர்த்துவதே கொடுமையாக இருக்கும். மழை என்று வந்தால் ஒருநாள்கூட வேலை கிடையாது. அப்போது காசு இல்லாமல் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதுதான் அந்த படத்தின் கதையே. இதற்குள் குடி கும்மாளம் என்றும் இருப்பார்கள். இதைதான் பாடலாகவும், வசனங்களாகவும் சொல்லியிருக்கிறோம். அதோடு, திருவிழாவில் கரகாட்ட கோஷ்டி ஆடினால் இரட்டை அர்த்த வார்த்தைகளாகத்தான் பேசுவார்கள். இது அனைவருக்குமே தெரியும். அதை எல்லோருமே ரசிப்பார்கள். இன்னைக்கு எப்எம்மில் அந்த பாடல்தான் அதிகமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில், களைப்பு தெரியாமல் இருக்க கொத்தனார்கள் டபுள் மீனிங்கில் பேசுவதை தவறு என்று சொல்ல முடியாது. அந்த மாதிரியான ஒரு ஏரியாவில் ஒரு கரகட்ட கோஷ்டி பாடினால் எப்படி பாடுவார்கள் என்பதைதான அந்த பாடலில் எழுதியிருந்தேன். இதே படத்தில்தான், வெட்டவெளி பொட்டலுல விட்டுச் சென்ற என் தெய்வமே -என்ற பாடலும் எழுதியிருக்கிறேன். அம்மா அப்பா இல்லாத ஒரு பொண்ணு, ஐந்து பசங்களுடன் கட்டிட வேலை செய்பவள், ஒருத்தனுக்கு வாக்கப்பட்டாள் என்ன நடக்கும் என்பதை சொல்லும் வகையில் அந்த பாடல் அமைந்துள்ளது. அந்த பாடலுக்கு பிறகு எல்லா பசங்களும் மனசு மாறுவார்கள். இப்படியொரு நல்ல சூழலுக்கான பாடலும் இதே படத்தில் எழுதியிருக்கிறேன். நானாக எதையும் எழுதிவிட முடியாது, கதையும், பாடலின் சூழலுக்கும் என்ன தேவையோ அதைத்தான் இந்த படத்தில் பாடல் களில் எழுதியிருக்கிறேன். இதை ஆபாசம் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது என்கிறார்.
மேலும், தொடர்ந்து சில படங்களுக்கு பாடல் எழுதி வரும் பாடலாசிரியர் கவிக்குமார், 2017ல் ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த படம் இன்னொரு மாயாண்டி குடும்பத்தார் படமாக இருக்கும். நான் இயக்குனர் இராசு மதுரவனின் உதவியாளர் என்பதால், அவர் பாணியிலேயே எனது முதல் படத்தை இயக்கப்போகிறேன் என்கிறார் கவிக்குமார்.