பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |

சமீபகாலமாக நடிகர் நடிகைகள் டுவிட்டர்களில் தங்களைப்பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்கள். அதோடு, சிலர் தங்களது சொந்த கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார்கள். அதேசமயம், சிலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், எமிஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமான போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த நிலையில், இலியானா, திரிஷா போன்ற நடிகைகள் தண்ணீருக்குள் நிற்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து தற்போது தமன்னாவும் தான் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்து லைக் கொடுத்து வருகின்றனர்.