2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

போடா போடி என்ற முதல் படத்திலேயே கவர்ச்சிகரமாக நடித்தவர் வரலட்சுமி. ஆனால் அதன்பிறகு அவர் நடித்த மதகஜராஜா படம் ரிலீசாகாத நிலையில், பாலாவின் தாரைத்தப்பட்டை படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதனால் கதையின் நாயகியாக நடிக்கும் அளவுக்கு வரலட்சுமிக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆனபோதும், அதன்பிறகு எதிர்பார்த்தபடி பெரிய படங்கள் அவ ருக்கு புக்காகவில்லை. இதனால் மலையாளத்தில் சென்று ஒரு படம் நடித்து விட்டு வந்த அவர், அம்மாயி படத்தில் நடித்து வந்தார்.
இந்த நேரத்தில் தற்போது மாதவன்-விஜயசேதுபதி நடிக்கும் விக்ரம் வேதா படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வரலட்சுமி, சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இந்த படங்களில் காதல் நாயகியாக நடிப்பதால் தனது உடல் எடையை 5 கிலோ வரை குறைத்துள்ளார் வரலட்சுமி. இதற்காக அவர் இரண்டு மாதங்களாக கடும் உடற்பயிற்சி எடுத்துள்ள அவர், இதே உடல்கட்டை தொடர்ந்து பராமரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.