தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

கபாலி படத்துக்கு பின், தன்ஷிகாவிற்கு, ராணி, விழித்திரு, காலக்கூத்து ஆகிய படங்கள், ரிலீஸ் ஆவதற்கு வரிசை கட்டி நிற்கின்றன. ஆனாலும், எந்தவிதமான பந்தாவும் இல்லாமல், எப்போதும் போல இயல்பாகவே பேசுகிறார். அவருடன் ஒரு சந்திப்பு:
ராணி படம் பற்றி சொல்லுங்களேன்?
ராணி, மலேஷியாவில் வாழும் ஒரு பொண்ணு; அந்த பெண்ணோட போராட்டம், அவளது உணர்வுகள் தான் ராணி படம். சமீபத்தில், அப்பா என்ற படம் வந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்த படமும் அதே போல், ரசிகர்களின் வரவேற்பை பெறும். த்ரில்லரும் இல்லை; பேய் படமும் இல்லை. இவை இரண்டுக்கும் இடையிலான உணர்வுகளை பற்றியது.
இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க, எப்படி சம்மதித்தீர்?
இந்த படத்தின் கதையால் ஈர்க்கப்பட்டு, இந்த வேடத்தில் நடிக்க சம்மதித்தேன்.இயக்குனர் கதை கூறிய போது, இந்த கேரக்டரை நம்மால் செய்ய முடியுமா என, யோசித்தேன். எனக்கு
முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் சம்மதித்தேன். இந்த படத்தில் நடித்ததற்காக என்னை பற்றி எந்த விமர்சனம் வந்தாலும் கவலையில்லை.
கபாலிக்கு முன் கபாலிக்கு பின், தன்ஷிகாவின் நிலவரம் என்ன?
ஒரு கலவரமும் இல்லை. என் குணம் எதுவும் மாறவில்லை. ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து அதிகமான வாய்ப்புகள் தேடி வருகின்றன. இதை சரியாக பயன்படுத்த வேண்டும்.
சினிமாவில், முக்கியமான ஓர் இடத்தை பிடிசிட்டோம்னு நினைக்கிறீங்களா?
அப்படி எல்லாம் இல்லை; தொடர்ந்து, வெற்றிப் படங்களில் நடிப்பதே, பெரிய விஷயம் தான். அடுத்ததாக, வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என, ஆசைப்படுகிறேன்.
வாய்ப்பை தேடி, நீங்கள் சென்ற நிலை மாறி, வாய்ப்புகள் உங்களை தேடி வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக கருதுகிறீரா?
அது, உண்மை தான். ஆனாலும், ஆரம்பத்தில் இருந்தே, எல்லா வாய்ப்புகளும் என்னை தேடித் தான் வந்தன. பரதேசி, அரவான் போன்ற படங்களும் அப்படித் தான் கிடைத்தன. நானாக போய், எந்த வாய்ப்பும் கேட்டது இல்லை.
ரஜினி கூட நடிச்சிட்டீங்க; அடுத்து,கமல் கூட நடிக்கும் ஆசை உண்டா?
அப்படி எதுவும் திட்டமிடவில்லை. கமல் கூட நடிக்க வாய்ப்பு வந்தால், அதை பயன்படுத்துவேன். அதே சமயம், வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, ரொம்ப மெனக்கெட மாட்டேன்.
சாய் தன்ஷிகா என, பெயர் மாற்றம் செய்த பின் தான், அதிகமான வாய்ப்புகள் வருகிறதா?
அப்படியும் சொல்லலாம்; ஒரு மன அமைதி கிடைத்தது. என் வாழ்வில் நல்ல விஷயங்களும் நடந்தன. இதையெல்லாம் சொல்லி, விளம்பரப்படுத்த விரும்பவில்லை.
சக நடிகையரில் யார் நடிப்பு பிடித்திருக்கு?
சமீபத்தில், நான் பார்த்த படங்களில், இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங், செமையா நடிக்கிறாங்க; அந்த பொண்ணு நடிப்பு, ரொம்ப யதார்த்தமாக இருந்தது.
உங்க பிறந்த நாளை, ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடினாங்க போல?
சிதம்பரத்தில் இருப்பவர்கள், அரவான் படம் பார்த்துவிட்டு, ரசிகர் மன்றம் வைப்பதற்காக என்னை கேட்டாங்க; அதனால் சம்மதித்தேன். ஆனால், நான் அவர்களுக்கு எந்தவிதமான உத்தரவும் போடுவது இல்லை; அவர்களாக சில விஷயங்களை செய்கின்றனர்; அவ்வளவு தான். இதை பெரிதுபடுத்த வேண்டாம்.