2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

முதல் ரவுண்டில், பிசியான நடிகையாக வலம் வந்தாலும், தன் நடிப்பு திறமையை காட்டும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என, கவலைப்பட்டவர் தமன்னா. இப்போது, அந்த சோகம் தீர்ந்து விட்டதாக, ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். தர்மதுரை படத்தில் நடித்ததற்காக, சிறந்த ஹீரோயின் விருது, தமன்னாவுக்கு கிடைத்தது தான், அவரது மகிழ்ச்சிக்கான காரணம். 'ஏசியன் விஷன் அவார்டு' என, அழைக்கப்படும் அந்த விருதில், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம், சிறந்த இயக்குனர் என, தர்மதுரை படத்துக்கு, நான்கு விருதுகள் கிடைத்தன. 'இனிமேல், என்னை யாரும் குத்துப் பாடலுக்கும், டூயட்டுக்கும் ஆட்டம் போடும் சோளக்கொல்லை என, கூற மாட்டார்கள்' என்கிறார் தமன்னா.