ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு |

எங்க வீட்டு பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த பாரம்பரிய நிறுவனமான விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில், பரதனின் கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் “பைரவா “ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன்(29.11.2016) “ பூசணிக்காய்“ உடைப்புடன் இனிதே நிறைவு பெற்றது.
படப்பிடிப்பின் நிறைவு நாளில் விஜய், தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி, பி.பாரதி ரெட்டி, இயக்குநர் பரதன், ஒளிப்பதிவாளர் சுகுமார், எடிட்டர் பிரவீன், உள்ளிட்ட படகுழுவினருடன் “ பைரவா “ திரைப்படத்தை தமிழ் நாடு முழுவதும் வெளியிடும் ஸ்ரீ கிரீன் புரொடக்க்ஷன்ஸ் சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பிராமையா,சரத் லோகிதாஸ்வா, சதிஷ், அபர்னா வினோத்,சிஜு ரோசலின், பாப்ரி கோஷ், மைம் கோபி, ஸ்ரீமன் ஆகியோரும் மிக முக்கியாமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முதல் முறையாக விஜய் படத்திற்கு சந்தோஷ் இசை அமைத்துள்ளார். தொடர்ந்து பைரவா திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகளும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பாடல்களும், பொங்கலுக்கு படமும் திரைக்கு வர இருக்கிறது.