2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

யூ டியூப் சாதனைகளையும், சமூக வலைத்தள டிரென்டிங்குகளையும் திரையுலகத்தினர் அதிகமாகவே கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். படம் வெற்றி பெற்று வசூலித்தால் மட்டுமே அதைப் பற்றி வெளியில் தகவலைப் பரப்புவார்கள். ஆனால், சுமாராகப் போனால் எந்த வசூல் விவரங்களும் வெளியில் தெரியாது. தோல்வியடைந்தால் சத்தமே இருக்காது.
பட வெளியீட்டிற்கு முன்னர் வரை ஒவ்வொரு படத்தைப் பற்றியும் சத்தங்கள் அதிகமாகவே இருப்பது வழக்கம்தான். ஆனால், அந்த சத்தம் வெற்றிகரமான சத்தமாக மாற படம் நன்றாக இருக்க வேண்டும். அது இருந்தாலே போதும் படம் ரசிகர்களின் ஆதரவுடன் கோடிகளை அள்ளிவிடும்.
விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'தெறி' படம் பற்றிய அனைத்துத் தகவல்களும், டீசர், டிரைலர், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் சத்தமாகவே எதிரொலித்தது. அது படம் வெளியான பின்னும் இன்னும் அதிகமாகியது. விஜய் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி அந்த சத்தத்தை மேலும் அதிகமாக்கினார்கள்.
இப்போது 'பைரவா' படத்தின் டீசரும் அதில் விஜய்யின் தோற்றமும் அடுத்த கொண்டாட்டத்திற்கு ஆரம்பமாகிவிட்டது. கடந்த மாதம் வெளியான இப்படத்தின் டீசர் 'தெறி' டீசரின் சாதனையை யு டியூபில் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இன்று மாலை 5 மணி வரை 'தெறி' டீசருக்கு இதுவரை 1,10,69,597 பார்வைகள் கிடைத்துள்ளது. 'பைரவா' டீசருக்கு 1,10,53,535 பார்வைகள் கிடைத்துள்ளது. 'தெறி' டீசரின் சாதனை முறியடிக்க இன்னும் 16,062 பார்வைகள்தான் தேவைப்படுகிறது. விரைவில், 'தெறி' டீசர் சாதனையை 'பைரவா' முறிடியத்துவிடும்.