சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பாலிவுட்டில் இளம் ஹீரோக்களில் வருண் தவானும் ஒருவர். இவர், தற்போது தனது தந்தையும், இயக்குநருமான டேவிட் தவான் இயக்கத்தில் ‛ஜூட்வா படத்தின் ரீமேக்கான ‛ஜூட்வா-2 படத்தில் நடித்து வருகிறார், சஜித் தயாரிக்கிறார். வருணுக்கு ஜோடியாக ஜாக்குலின் மற்றும் டாப்சி நடிக்க இருக்கிறார்கள்.
ஜூட்வா படத்தில் ஹீரோவாக நடித்த சல்மான் கான் ஜூட்வா-2 வில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான, நிலையில் இப்போது அந்தப்படத்தில் நடித்த கரீஷ்மா கபூரும் நடிக்க இருப்பதாக கூறப்படகிறது.
இதைப்பற்றி சமீபத்தில் நடத்த நிகழ்ச்சி ஒன்றில் கரீஷ்மா கூறியதாவது....."‛ஜூட்வா' படத்தை, ‛ஜூட்வா-2' என்று பெயரில் டேவிட் ரீமேக் செய்ய இருப்பதாக கேள்விப்பட்டேன், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வருண் தவானை ஒரு நடிகராக எனக்கு ரொம்ப பிடிக்கும், இப்படத்தில் அவர் சிறப்பாக நடிப்பார் என நம்புகிறேன். இந்தப்படத்தில் நான் நடிப்பது பற்றி டேவிட் என்னிடம் எதுவும் கூறவில்லை, ஆனால் நடிக்க ஆசைப்படுகிறேன்" என்று கூறியுள்ளார்.
‛ஜூட்வா-2 படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது