2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பொதுவாக இளம் நடிகர்களுக்கு ரசிகைகள் உருவாவது இயல்பான ஒன்றுதான். ஒரு சிலருக்கு சம்பந்தப்பட்ட நடிகரை பிடித்துப்போய் வயசுக்கோளாறால் அவர்கள் மீது காதலிலும் விழுவார்கள். இதனாலேயே வீட்டைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி, தங்களது ஆதர்ச நடிகரை பார்க்க கிளம்பிவிடும் ரசிகைகள் இன்றும் கூட உண்டு. இப்படி கிளம்பும் துணிச்சல் இல்லாத சில இளம்பெண்கள் முன்பெல்லாம் தங்களது மனதை கடிதங்களாக மாற்றி நடிகர்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதில் சிலர் ரத்தத்தால் கூட கடிதம் எழுதும் அறியாமை நிகழ்வுகளும் நடைபெறும்.
ஆனால் இன்று எல்லாமே எஸ்.எம்.எஸ், பேஸ்புக், வாட்ஸ் அப் என்று மாறிவிட்ட பின்னர் கடிதம் எழுதும் போக்கு குறைந்துள்ளது அல்லது அழிந்தேவிட்டது என்று நினைத்தால், ஜெயராம் மகன் காளிதாஸுக்கு ரத்தத்தால் காதல் கடிதம் எழுதி அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர்.
இதனால் அதிர்ச்சியான காளிதாஸ், தன் மீது உண்மையான அன்பு வைத்திருப்போர், அதைக்காட்டுவதற்கு இதுபோன்ற கண்டிக்கத்தக்க முயற்சிகளில் இறங்க கூடாது எனவும், தான் நடித்த படங்களை தியேட்டர்களுக்கு சென்று பார்த்து ரசிப்பதே தனக்கு அவர்கள் அன்பை செலுத்தும் விதமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். காளிதாஸ் நடித்து ஒரே ஒரு படம் மட்டுமே வெளியான நிலையில் இப்படி ஒரு கடிதம் அவருக்கு வந்திருப்பது ஆச்சர்யம் தான்.